மே 2025 நிகழும் மிகப் பெரிய கிரகப் பெயர்ச்சிகள்.. 12 ராசிக்கான முழு ராசிபலன்

May Grah Gochar: மே 2025 மிக முக்கிய மாதமாகும். ஏனெனில் இந்த மாதம் ஆறு கிரகங்களின் ராசி மாற்றம் நிகழப் போகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 24, 2025, 07:11 PM IST
  • சில ராசிக்காரர்களுக்கு இது பல சவால்களைத் தரும்.
  • மன அழுத்தத்தை உருவாக்கி, தன்னம்பிக்கையை இழக்க வைக்கலாம்.
  • முதலீடு செய்யும் முன் கவனமாக சிந்தித்து ஆபத்தைத் தவிர்க்கவும்.
மே 2025 நிகழும் மிகப் பெரிய கிரகப் பெயர்ச்சிகள்.. 12 ராசிக்கான முழு ராசிபலன்

Planetary Transits May 2025: கிரகங்களின் பெயர்ச்சி நமது அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை தரும். இந்த நேரத்தில், அனைத்து ராசிகளுக்கும் சில முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும், ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இது பல சவால்களைத் தரும்.

Add Zee News as a Preferred Source

மே 2025 இல் பல முக்கியமான கிரங்களின் பெயர்ச்சி நிகழப் போகிறது, ஏனெனில் இந்த மாதம் மொத்தம் ஆறு கிரகங்களின் பெயர்ச்சி நிகழப் போகின்றன. இந்த முக்கிய கிரங்களின் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் ஒரு சில பாதிப்பை ஏற்படுத்தக் கூடலாம். இந்த கிரகங்களில், புதன், சூரியன், குரு, சுக்கிரன், ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி நிகழப் போகிறது. மே மாதம் கிரகங்களின் இந்தப் பெயர்ச்சி எந்த ராசியில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதையும், எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு, மே மாதம் புதன் மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சியால் நேர்மறையான பலன் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி உண்டாகலாம், மேலும் தொழில் வாழ்க்கையில் புதிய உயரங்களை தொடலாம். இருப்பினும், ராகு-கேதுவின் பெயர்ச்சியால் மன அழுத்தத்தை உருவாக்கி, தன்னம்பிக்கையை இழக்க வைக்கலாம்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் புதனின் பெயர்ச்சி மிகவும் மங்களகரமான பலனைத் தரும். நிதி ரீதியாக நன்மை உண்டாகும், சமூக கௌரவம் அதிகரிக்கும். அரசாங்க வேலையை பெறுவதில் வெற்றி பெறுவீர்கள். மேஷ ராசியில் நடக்க உள்ள சுக்கிரன் பெயர்ச்சியால், காதல் வாழ்க்கையில் மன கசப்புகள் ஏற்படலாம். முதலீடு செய்யும் முன் கவனமாக சிந்தித்து ஆபத்தைத் தவிர்க்கவும்.

மிதுனம்: மிதுன ராசிக்கு குருவின் பெயர்ச்சி மிகவும் மங்களகரமான பலனைத் தரும். கல்வி, திருமணம் மற்றும் தொழிலில் நல்ல செய்தியைப் பெறலாம். புதன் இரண்டு முறை பெயர்ச்சி அடையப் போவதால், குழப்பங்கள் ஏற்படக்கூடும். ஒவ்வொரு முடிவையும் நன்கு யோசித்து எடுக்கவும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் பெயர்ச்சி வெற்றியைத் தரும். கலை, எழுத்து அல்லது வடிவமைப்பு போன்ற துறைகளில் உங்கள் திறமைகள் பிரகாசிக்கக்கூடும். ராகு-கேதுவின் பெயர்ச்சியால் குடும்ப வாழ்க்கையில் பதற்றம் ஏற்படும்.

சிம்மம்: சிம்ம ராசிக்கு, சூரியனின் பெயர்ச்சி தன்னம்பிக்கையை தரும். வாழ்க்கையில் வெற்றியையும் மரியாதையையும் பெறுவீர்கள். கேதுவின் பெயர்ச்சியால் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டும். ஒவ்வொரு முடிவிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வணிக ரீதியாக புதனின் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். பதவி உயர்வு மற்றும் தொழில் வளர்ச்சி ஏற்படலாம். குருவின் பெயர்ச்சியால் சில முடிவுகள் தாமதமாகலாம்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் பெயர்ச்சியால் திருமண வாழ்க்கையில் இனிமையைத் தரும். ராகுவின் பெயர்ச்சியால் மன அழுத்தமும் குழப்பமும் ஏற்படலாம்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு, குருவின் பெயர்ச்சி நிதி ரீதியாக நன்மை பயக்கும். முதலீடு மற்றும் செல்வக் குவியும். கேதுவின் பெயர்ச்சியால் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு, சூரியன் மற்றும் புதனின் பெயர்ச்சி தொழில் முன்னேற்றத்தைத் தரும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். ராகுவின் பெயர்ச்சியால் சில பயண இடையூறுகளை சந்திக்கலாம். மன அழுத்தம் அதிகரிக்கலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் பெயர்ச்சி பண ஆதாயத்தை தரும், ஆடம்பரமான வசதிகளையும் தரும். வியாபாரத்தில் புதிய லாபம் மற்றும் வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். இருப்பினும், குருவின் செல்வாக்கு காரணமாக, சில முடிவுகளில் தாமதமாகலாம்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி சில தனித்துவமான வாய்ப்புகளைத் தரும். புதிய முயற்சி வெற்றியைத் தரும். கேதுவின் பெயர்ச்சியால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு, குருவின் பெயர்ச்சியால் நன்மை பயக்கும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். புதனின் இரட்டைப் பெயர்ச்சியால் சில குழப்பங்கள் ஏற்படலாம். முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை. )

மேலும் படிக்க | ஏற்றம் தரும் ஏப்ரல் மாதம்... மேஷம் முதல் மீனம் வரை... பலன்களும் ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களும்

மேலும் படிக்க | நேர்மையை உயிர் மூச்சாக கருதும் 4 ராசிகள்! யாரெல்லாம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News