)
Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதன் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், பகுத்தறிவு, கணக்கீடுகள், எழுத்து, வணிகம், கல்வி, உறவுகள் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். புதன் மனிதர்களின் மூளையின் வேகம், சிந்திக்கும் திறன் மற்றும் பிறருடன் பழகும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் புதனின் செல்வாக்கு வலுவாக இருந்தால், அவர் புத்திசாலியான, திறமையான, சாமர்த்தியமான மற்றும் வெற்றிகரமான நபராக ஜொலிக்கிறார். ஜோதிட கணக்கிடுகளின் படி, அக்டோபர் 3, 2025 அன்று, புதன் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். துலாம் சுக்கிரனின் ராசி. மேலும் புதன் சுக்கிரனின் நட்பு கிரகமாகும். ஆகையால், இந்த பெயர்ச்சி பொதுவாக, நல்லிணக்கம், உறவு, அரசியல், கூட்டாண்மை ஆகிய துறைகளில் நல்ல பலன்களைத் தரும்.
துலாம் ராசியில் புதன் பெயர்ச்சியின் முக்கியத்துவம்
துலாம் ராசியில் புதனின் பெயர்ச்சியால் குறிப்பாக ஊடகம், சந்தைப்படுத்தல், கல்வி, ஆலோசனை, எழுத்து, வடிவமைப்பு, சட்டம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். புதன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
புதன் பெயர்ச்சி கூட்டாண்மை மற்றும் திருமணத்திற்கான ஸ்தானத்தில் நடக்கும். இந்த காலத்தில் புதிய உறவுகள் மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சாத்தியமாகும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.
ரிஷபம் (Taurus)
உடல்நலம் மேம்படும். பணி இடத்தில் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் தொடர்பு திறன் மேம்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
மிதுனம் (Gemini)
புதனின் பெயர்ச்சியால், மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகள் நடக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். படைப்பாற்றலால் புகழ் உண்டாகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
கடகம் (Cancer)
புதன் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த வேறுபாடுகள் தீரும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.
சிம்மம் (Leo)
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். பண வரவு அதிகமாகும். ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்களுக்கு குறிப்பாக அதிக நன்மைகள் கிடைக்கும்.
கன்னி (Virgo)
புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். முதலீடு செய்ய இது ஏற்ற நேரமாக இருக்கு.
துலாம் (Libra)
துலா ராசிக்காரர்களுக்கு சுய வெளிப்பாடு அதிகமாக இருக்கும். சரியான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த நேரம் உங்கள் அடையாளத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம் (Scorpio)
புதன் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். தான தர்மத்தில் ஈடுபடுவீர்கள். பழைய குழப்பங்கள் தீரும்.
தனுசு (Sagittarius)
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிர்காலத்திற்காக திட்டமிட இது நல்ல நேரமாக இருக்கும்.
மகரம் (Capricorn)
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழிலில் சிறந்த நன்மைகள் ஏற்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளுடனான தொடர்பு மேம்படும்.
கும்பம் (Aquarius)
கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அதிக நன்மைகளை அளிக்கும். சிந்தனை மற்றும் கண்ணோட்டம் முதிர்ச்சியடையும். இதனால் நட்பு வட்டம் அதிகமாகும்.
மீனம் (Pisces)
மீன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி தொழிலில் முன்னேற்றம், படிப்பில் நாட்டம், பண வரவு, வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய நல்ல பலன்களை அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ