)
Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட குணாதிசயம் உள்ளது. இந்த கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் வரும்போதெல்லாம், மனிதர்களின் வாழ்வில் அந்த அம்சங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஜோதிட சாஸ்திரப்படி புதன் கிரகம் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், கல்வி, வணிகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணி கிரகமாகக் கருதப்படுகிறார்.
அக்டோபர் 3, 2025 அன்று அதிகாலை 3:41 மணிக்கு புதன் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். துலாம் புதனின் நட்பு ராசியாகக் கருதப்படுகிறது. ஆகையால், இந்த காலகட்டத்தில், புதன் தனது முழு சக்தியுடனும் செல்வாக்குடனும் இருப்பார். புதனின் இந்தப் பெயர்ச்சி தொழில், வணிகம், கல்வி, உறவுகள் மற்றும் நிதி விஷயங்களில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும்.
துலாம் ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் இதனால் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
புதனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தில் புதிய வாய்ப்புகளைத் தரும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கூட்டாண்மைகள் நன்மை பயக்கும். எனினும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஆவணங்களை கவனமாகப் படிப்பது நல்லது. இந்த காலத்தில் திருமண வாழ்க்கையில் இருந்த மன அழுத்தம் குறையும்.
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை அழுத்தம் அதிகரிக்கலாம், ஆனால் கடின உழைப்பு பலனளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். சக ஊழியர்களின் ஆதரவு தொடரும், இது பணிகளை விரைவாக முடிக்க உதவும்.
மிதுனம் (Gemini)
புதன் பெயர்ச்சி மிதுன ராசி மாணவர்களுக்கும் போட்டித் தேர்வு எழுதும் ஆர்வலர்களுக்கும் சாதகமான நேரத்தை உண்டாக்கிக்கொடுக்கும். காதல் உறவுகள் வலுவடையும். படைப்பாற்றல் மற்றும் கலை சார்ந்த அறிவு அதிகரிக்கும்.
கடகம் (Cencer)
கடக ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். சொத்து தகராறுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்களிடையேயான தொடர்பும், நல்லிணக்கமும் பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
சிம்மம் (Leo)
உங்கள் பேச்சு மற்றும் பழகும் திறனால், இந்த காலத்தில் பல நன்மைகளை அடைவீர்கள். புதன் பெயர்ச்சி பல குறுகிய கால நன்மைகளை அளிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். ஊடகம் மற்றும் சந்தைப்படுத்தலில் ஈடுபடுபட்டுள்ளவர்கள் நல்ல முன்னேற்றத்தை காணபார்கள்.
கன்னி (Virgo)
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் நிதி நிலை வலுப்பெறும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும்.
துலாம் (Libra)
புதன் பெயர்ச்சி நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் தரும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகள் மற்றும் நெட்வொர்க்கிங் நன்மை பயக்கும். தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும்.
விருச்சிகம் (Scorpio)
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். ஆகையால், இந்த நேரத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. வெளிநாடுகள் தொடர்பான வேலைகள் சாதகமாக நடந்து முடியும். ஆன்மீகம் மற்றும் தியானத்தில் நாட்டம் அதிகமாகும்.
தனுசு (Sagittarius)
புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் மற்றும் சமூகத்திலிருந்து அதிக ஆதரவு கிடைக்கும். குழுப்பணி மற்றும் நெட்வொர்க்கிங் நன்மை பயக்கும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும்.
மகரம் (Capricorn)
பணியிடத்தில் கௌரவம் அதிகமாகும். மேலதிகாரிகளிடமிருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும். தொழில் முன்னேற்றம், ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் குடும்பத்திற்கும் தொழிலுக்கும் இடையிலான சமநிலை அவசியம்.
கும்பம் (Aquarius)
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு சாதகமாக இருக்கும். புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் வெளிநாட்டுப் பயணத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி துறையில் உள்ளவர்களுக்கு அதிக வெற்றி கிடைக்கும்.
மீனம் (Pisces)
புதன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான நன்மைகளை அளிக்கும். எனினும் சில முக்கிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நிதி பரிவர்த்தனைகளை கவனமாக மேற்கொள்வது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். மூதாதையர் சொத்து கிடைக்கக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ