)
Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில், புதனின் பெயர்ச்சி, அதாவது அதன் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். புதன் பேச்சாற்றல், வணிகம், லாபம், அறிவாற்றல், புத்திசாலித்தனம், வர்த்தகம் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
தற்போது, புதன் துலாம் ராசியில் உள்ளார். தீபாவளிக்குப் பிறகு, அக்டோபர் 24 ஆம் தேதி, புதன் தனது ராசியை மாற்றுவார். அக்டோபர் 24 ஆம் தேதி, புதன் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
பஞ்சாங்க கணக்கிடுகளின் படி, அக்டோபர் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மதியம் 12:39 மணிக்கு புதன் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆவார். புதனின் இந்தப் பெயர்ச்சி பொதுவாக மனிதர்களின் சிந்தனை, தொடர்புகொள்ளும் திறன் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை ஆழப்படுத்துகிறது. செவ்வாய் ராசியில் புதன் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் மூன்று ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மூன்று ராசிக்காரர்களின் தொழில், முதலீடுகள் மற்றும் வணிகத்தில் அதிசய மாற்றங்கள் ஏற்படலாம். புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி ஆதிக நன்மை பயக்கும். முதலீடுகள், காப்பீடு, பங்குச் சந்தை அல்லது குடும்ப சொத்து தொடர்பான விஷயங்களில் லாபம் ஈட்ட வாய்ப்புகள் உள்ளன. புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகலாம். பதவி உயர்வு சாத்தியமாகும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
மிதுனம் (Gemini)
விருச்சிக ராசியில் புதனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மூலோபாய நன்மைகளை அளிக்கும். அவர்கள் புதிய திட்டங்களை வகுக்க முடியும். இந்த திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது நடந்துமுடியும். முதலீடுகள் லாபத்தை ஈட்ட வாய்ப்புள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி-ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைவார்கள்.
விருச்சிகம் (Scorpio)
விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களின் ஒட்டுமொத்த ஆளுமையை மேம்படுத்தும். உங்கள் பேச்சும் செல்வாக்கும் மேம்படும். உங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம். நம்பிக்கையான முடிவுகளை எடுப்பது உங்கள் தொழில் மற்றும் வணிகத்தை உயர்த்தும்.
தனுசு (Sagittarius)
புதன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். குடும்ப உறவுகள் வலுவாகவும் இனிமையாகவும் இருக்கும். லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ