)
Budhan Nakshatra Peyarchi Palangal: புதன் கிரகங்களின் இளவரசராக கருதப்படுகிறார். புதன் புத்திக்கூர்மை, பேச்சாற்றல், சாதுர்யம், வணிகத்திறன், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்கப்படுகிறார். புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் பேதெல்லாம், இந்த அம்சங்களில் அதன் தக்கம் இருக்கும்.
புதன் அக்டோபர் 7, 2025 அன்று மதியம் 12:21 மணிக்குப் சித்ரா நட்சத்திரத்திலிருந்து பெயர்ச்சியாகி சுவாதி நட்சத்திரத்தில் நுழைவார். வேத ஜோதிடத்தின்படி புதன் விவேகம் மற்றும் எழுதும் திறன்களுக்குப் பொறுப்பான கிரகமாக உள்ளார். மேலும் புதன் சுவாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனவுடன் அது சுதந்திரம், சமநிலை மற்றும் அறிவை அதிகமாக்கும்.
புதன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். புதனின் இந்தப் பெயர்ச்சி சில ராசிகளுக்கு அபரிமிதமான செல்வத்தை கொண்டு வரும். குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் இதனால் அற்புதமான அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர். இந்த ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலில் விரைவான வளர்ச்சியை அனுபவிக்க வாய்ப்புள்ளது. இந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம் (Gemini)
சுவாதி நட்சத்திரத்தில் புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் அறிவுசார் திறனை அதிகரிக்கும். உங்கள் வார்த்தைகள் உங்களுடன் வேலை அல்லது வணிகத்தில் உள்ளவர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஊடகம், எழுத்து, கல்வி அல்லது சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் கணிசமாக பயனடையலாம். உங்கள் நெட்வொர்க்கிங் திறன்கள் புதிய வாய்ப்புகளைத் திறக்கும். நேர்காணல்கள், கூட்டங்கள் அல்லது பொதுப் பேச்சு வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வார்த்தைகளில் தெளிவாக இருங்கள், சிந்தித்து வாக்குறுதிகளை அளிக்கவும்.
கன்னி (Virgo)
புதன் கன்னி ராசியை ஆளும் கிரகம். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் சுவாதி நட்சத்திரத்தில் நுழைவது ஒரு வரப்பிரசாதமாக இருக்கலாம். இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். முதலீடுகள் லாபத்தைத் தரும். வேலை தேடிக்கொண்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு, இந்த நேரம் புதிய ஒப்பந்தங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய திட்டங்கள் தொடங்கப்படும், பழைய நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்கப்படும். ஆவணங்களில் கையெழுத்திடும் முன், கவனமாக இருங்கள், அவசரத்தைத் தவிர்க்கவும்.
துலாம் (Tulam)
துலாம் ராசிக்காரர்களுக்கு ஸ்வாதி நட்சத்திரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அது இந்த ராசியுடன் தொடர்புடையது. புதனின் இந்தப் பெயர்ச்சி உங்கள் சமூக அந்தஸ்து, தொடர்புகள் மற்றும் மரியாதையை அதிகரிக்கும். அரசியல், சமூக அல்லது அரசுத் துறைகளில் ஈடுபடுபவர்கள் இந்த நேரத்தில் சிறப்பு நன்மைகளைப் பெறலாம். உங்கள் முடிவெடுக்கும் திறன்கள் மேம்படும், மேலும் குடும்ப மரியாதையும் அதிகரிக்கும். பொது வாழ்வில் சுறுசுறுப்பாக இருங்கள், பழைய தொடர்புகளுடன் மீண்டும் இணையுங்கள், ஈகோ அல்லது தவறான புரிதல்களைத் தவிர்க்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ