சனி பகவான் முதல் சுக்கிரன் வரை... ஜூலை மாத கிரக பெயர்ச்சிகளால்... 6 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்

Lucky Zodiacs of 2025 July: ஜூலை மாதத்தில் செவ்வாய் சுக்கிரன் சூரியன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளுடன், சனி மற்றும் புதன் கிரகம் வக்ர நிலையை அடைய உள்ளது. இதனால் சில ராசிகளுக்கு ஜூலை மாதம் ஜாக்பாட் பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2025, 05:38 PM IST
  • ஜூலை மாத கிரக பெயர்ச்சிகள் சில ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்களை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
  • சனி பகவான், ஜூலை மாதம் 13ஆம் தேதி வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார்.
  • சில ராசிகள், குறையாத அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் பெறுவார்கள்.
சனி பகவான் முதல் சுக்கிரன் வரை... ஜூலை மாத கிரக பெயர்ச்சிகளால்... 6 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்

ஜூலை மாத ராசி பலன்: ஜோதிட சாஸ்திரத்தில், மாத பலன்கள் குறிப்பிட்ட மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகள், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றம் மற்றும் கிரக பெயர்ச்சிகளால் ஏற்படும் சேர்க்கை ஆகியவற்றை கொண்டு ராசிகளுக்கான பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜூலை மாதத்தில் நிகழும், கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரக நிலை மாற்றங்கள் சில ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்களை கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

ஜூலை மாத கிரக பெயர்ச்சிகள் விவரம்

ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற சனி பகவான், ஜூலை மாதம் 13ஆம் தேதி வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். சனிபகவான் வக்ர நிலையில் சஞ்சரிப்பது, அதன் வீரியத்தை அதிகரிக்கும் என்பதால் சனி வக்கிர பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. அதோடு நெருப்பின் அம்சமாக விளங்கும் சூரியன் கடக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆவார். ஆடம்பர சுகபோக வாழ்க்கை அளிக்கும் சுக்கிரன், ஜூலை தொடக்கத்தில் ரிஷப ராசியில் உள்ள நிலையில், மிதுனத்திற்கு செல்கிறார். ஜூலை மாத கிரக பெயர்ச்சிகள் காரணமாக சில ராசிகள், குறையாத அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் பெற்று வளமான வாழ்க்கை வாழ்வார்கள் எங்கின்றனர் ஜோதிடர்கள்.

ரிஷப ராசிக்கான ஜூலை மாத பலன்கள்

வருமானத்திற்கு குறைவிருக்காது. செல்வத்தை வெட்டுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமைக்கான, அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறுவார்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாணவர்கள் பிடித்த உயர்கல்வி கிடைத்து, படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வக்ர நிலையை அடையும் சனி பகவான் கூறியயாத அதிர்ஷ்டத்தை கொடுப்பார்.

மிதுன ராசிக்கான ஜூலை மாத பலன்கள்

திட்டமிட்டபடி அனைத்து வேலைகளும் நடக்கும். எண்ணங்கள் நிறைவேறும். நிலுவையில் இருந்த நிதி சார்ந்த விஷயங்கள், ஒவ்வொன்றாக நிறைவேற தொடங்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். பணியிடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவற்றுக்கான வாய்ப்பு உண்டு.

கடக ராசிக்கான ஜூலை மாத பலன்கள்

மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஜூலையில் உருவாகும் புத ஆதித்ய ராஜயோகம், நிதி சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து, பொருளாதார நிலை மேம்பட உதவும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். ஆன்மீக விஷயங்களை நாட்டம் அதிகரிக்கும்.

விருச்சிக ராசிக்கான ஜூலை மாத பலன்கள்

அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் கைகூடிவரும். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன் நேர வாய்ப்பு கிடைக்கும். சிக்கலாக இருந்த பணிகள் அனைத்தும் துரித கதியில் நிறைவேறும். தன்னம்பிக்கை சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசிக்கான ஜூலை மாத பலன்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நினைக்கும் எதிரிகள் தோல்வியை சந்திப்பார்கள். சக ஊழியர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். இதனால் இலக்கை எளிதாக அடைவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

மகர ராசிக்கான ஜூலை மாத பலன்கள்

நிலுவையில் உள்ள பணிகள் நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு தேடி வரும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்ல நிலையை அடையலாம். பெரியவர்கள் பெற்றோர்கள் ஆசியுடன் சொத்துக்கள் வாங்கும் யோகம் கூடி வரும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மீனத்தில் வக்கிரமடையும் சனி பகவான்.... சவால்களும் குழப்பங்களும் நிறைந்த 138 நாட்கள்

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கு, வெற்றிகள் குவியும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News