ஜோதிடத்தில் சந்திரனும் ஒரு முக்கிய கிரகனமாகும். சந்திர கிரகனம் ஒரு ராசியில் வெறும் இரண்டரை நாட்கள் மட்டுமே நிலைக்கும். ஒவ்வொரு இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும் தனது ராசியை மாற்றிக்கொள்ளும். இருப்பினும் அந்த குறுகிய நாட்களில் சக்திவாய்ந்த மாற்றங்களை நிகழும் தன்மை சந்திரனுக்கு உள்ளது. இந்த நிலையில், வசந்த பஞ்சமி என்ற மங்களகரமான நாளில், சந்திரன் ராசி மாறுகிறது. அதாவது கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைகிறது. இந்த மாற்றம் நாளை (ஜனவரி 23) சரியாக காலை 8.34 மணிக்கு நிகழ உள்ளது.
சந்திரனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில குறிப்பிட்ட ராசிகளில் மட்டும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் பண ரீதியாக அமோக வளர்ச்சியை பெற இருக்கின்றனர். அவர்கள் யார் யார்? என்பதை இங்கு பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வசந்த பஞ்சமி மற்றும் அதற்கு பிந்தைய நாட்கள் மங்களகரமானதாக அமையும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வி மற்றும் கலைத்துறையில் வெற்றியை பெற முடியும். கடன் பிரச்சனை இருந்தால் அது தீரும். கடின உழைப்பு நல்ல பலன் இருக்கும். வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியின் 5ஆம் வீட்டை சந்திரன் கடந்த செல்ல இருக்கிறது. இதனால் கல்வி போன்ற விஷயங்களில் வெற்றியை பெற முடியும். இந்த காலகட்டத்தில் சரஸ்வதி தேவியின் அருள் இருக்கும். கையில் எடுக்கும் காரியங்கள் வெற்றி அடையும். போட்டி தேர்வுகளுக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். நிறைய பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் அது உங்களுக்கு வெற்றியையே பெற்று தரும். அங்கீகாரமும் புகழும் உங்களை தேடி வரும். வாழ்க்கையில் அமைதி அதிகரித்து மகிழ்ச்சி பெருகும்.
தனுசு
தனுசு ராசியின் 4ஆம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இது மிகவும் மங்களகரமானதாகும். இதனால் தனுசு ராசிக்காரர்கள் பல நல்ல பலன்களை பெறுகிறார்கள். தொழில் வாழ்க்கையில் உச்சத்தை அடையலாம். கலைதுறையில் இருப்பவர்கள் பெரிய அளவில் சாதிக்கும் வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் அதிகரிக்கும். பழைய முதலீடுகள் லாபத்தை தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல மாற்றம் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க: இன்றைய ராசிபலன்: (ஜனவரி 22 - வியாழக்கிழமை) - செலவு நிறைந்த நாள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









