)
Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரப்படி புதன் கிரகங்களின் இளவரசராகக் கருதப்படுகிறார். அவருக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. ஜாதகத்தில் புதன் வலுவாக இருப்பவர்கள், தங்கள் புத்திசாலித்தனத்தால் வாழ்க்கையில் உயர் பதவிகளை அடைகிறார்கள். அவர்களின் பேச்சில் இனிமை இருக்கும், மேலும் அவர்கள்பால் பலர் ஈர்க்கப்படுகிறார்கள்.
இது தவிர, புதனின் தாக்கம் வலுவாக உள்ளவர்களின் பகுத்தறிவு சக்தியும் வலுவாக இருக்கும். ஜாதகத்தில் புதன் வலுவாக இருப்பவர்கள் சொந்த தொழில் செய்யலாம். இதில் அவர்கள் நல்ல பலனடைவார்கள்.
புதன் பெயர்ச்சி
ஜோதிட கணக்கீடுகளின் படி புதன் 14 முதல் 21 நாட்களுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைகிறார். இருப்பினும், சில சூழ்நிலைகளில், புதன் பல ராசிகளில் 2 மாதங்கள் வரை கூட இருப்பார். அக்டோபர் 3, 2025 அன்று, அதிகாலை 3:47 மணிக்கு, புதன் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் சுமார் 20 முதல் 25 நாட்கள் தங்குவார். துலா ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் ஆனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும். இவர்களது வாழ்வில் புதிய தெம்பு கிடைக்கும். உத்வேகத்துடன் பணிகளை செய்வார்கள். புதன் பெயர்ச்சியால் பெரும் பயன் பெறவுள்ள அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடகம் (Cancer)
துலாம் ராசியில் புதன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். திருமணமானவர்களுக்கு மன அமைதி கிடைக்கும், உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். அக்டோபர் மாதத்தில் சொந்தமாக வாகனம் வாங்குவது நல்லது. இது தவிர, இந்த நேரம் முதலீட்டிற்கும் உகந்ததாக இருக்கும். முடிவெடுப்பதில் எந்த குழப்பமும் இருக்காது. மாறாக அலுவலக பணிகளில் இருக்கும் கடக ராசிக்காரர்களின் பணி பாணி மேம்படும். மேலும், மேல் அதிகாரிகள் உங்கள் வேலையால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்களால் நிதி நன்மைகள் கிடைக்கும்.
துலாம் (Libra)
புதனின் இந்தப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறிது முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமான துலாம் ராசிக்காரர்களின் குடும்ப தகராறுகள் முடிவடையும், புதிய உறுப்பினர் வீட்டில் சேருவார். பணியிடத்தில் எந்தத் தடைகளும் இருக்காது, மாறாக சக ஊழியர்களுடனான உறவு வலுவடையும். இது தவிர, வருமான ஆதாரங்களில் அதிகரிப்பு இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் தங்கள் வேலையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். மேலும், புதிய கூட்டாளர்களுடன் சேருவதால் நிதி நன்மைகளும் கிடைக்கும்.
மீனம் (Pisces)
புதனின் அருளால், மீன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். திருமணமானவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பார்கள். மேலும், நீண்ட பயணம் மேற்கொள்ள ஒரு திட்டம் வகுக்கப்படும். இந்த பயணங்களால் சாதகமான நன்மைகள் ஏற்படும். தொழிலதிபர்களின் செலவுகள் குறையும், வணிகம் விரிவடையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மன அழுத்தத்திற்கு தீர்வு கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ