Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். செவ்வாய் ஆற்றல், சகோதரத்துவம், நிலம், சக்தி, தைரியம், வீரம் மற்றும் துணிச்சலின் காரணியாகக் கருதப்படுகிறார். இவர் தனது ராசியை மாற்றும்போதெல்லாம், மனிதர்களின் வாழ்வில் இந்த அம்சங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாயின் பெயர்ச்சி பல ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும். அக்டோபர் 27 ஆம் தேதி, செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடையவுள்ளார்.
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், செவ்வாய் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆவது சில ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளையும் நல்ல நேரத்தையும் கொண்டு வரும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வணிகங்களில் லாபத்தை அனுபவிப்பார்கள். இவர்களது பண வரவு அதிகமாகும். செவ்வாய் பெயர்ச்சியால் சிறப்பு பலங்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
விருச்சிகம் (Scorpio)
செவ்வாய் பெயர்ச்சி விருச்சிக ராசியில்தான் நடைபெறவுள்ளது. செவ்வாய் உங்கள் லக்கின வீட்டில் பெயர்ச்சி அடைவார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த நேரம் இவர்களுக்கு சாதகமாக இருக்கும். செவ்வாயின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய முதலீட்டுகளுக்கும் இது ஏற்ற நேரமாக இருக்கும். வணிகத்தை விரிவாக்க வாய்ப்பு அமையும்.
துலாம் (Libra)
செவ்வாய் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆவது துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல காலத்திற்கான துவக்கமாக இருக்கும். அவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இருப்பவர்கள் மகத்தான லாபத்தை அடைவார்கள். அவர்களது நிதி நிலைமை வலுவடையும். இந்த காலத்தில் முருகப்பெருமானின் அருளால் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதாரத் துறையில் வளர்ச்சி இருக்கும். இந்த காலத்தில் மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது.
மீனம் (Pisces)
மீன ராசிக்காரர்களுக்கு, செவ்வாய் பெயர்ச்சியால் வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். வீடு, சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலில் லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக இருந்து வந்த ஒரு தகராறு முடிவுக்கு வரலாம். ஒரு புதிய வணிக ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க லாபத்தைத் தரும். இந்த நேரம் மாணவர்களுக்கும் சிறப்பாக அமையும். வேலை தேடுபவர்களும் வெற்றி பெறலாம். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுக்கிரனின் நவபஞ்ச ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பிரகாசமான எதிர்காலம், அதிர்ஷ்டம் குவியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









