ஜோதிட சாஸ்திரத்தில், கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரக நிலைகள் சில யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் சனி மற்றும் புதனின் நிலையால் உருவாகும் நவபஞ்சம்யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். புதனுக்கும் சனி பகவானுக்கும் இடையில், 120 டிகிரி கோணம் உருவாகிய உள்ளதன் காரணமாக, ஜூன் 28ஆம் தேதி அன்று நவபஞ்ச யோகம் உருவாகும்.
நவபஞ்சம யோகத்தின் பலனால், சில ராசிகளின் சிந்தனை மற்றும் அறிவாற்றல் மேம்பட்டு, சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் என்றும், சனி மற்றும் புதனின் அருளால் நினைத்த காரியம் நடக்கும், அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது என்றும், இந்த யோகத்தினால் ராஜயோக பலன்களை பெறுவார்கள் என்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ரிஷப ராசிக்கான பலன்கள்
சனி புதன் நிலையால் உருவாகியுள்ள நவபஞ்சம யோகம் காரணமாக, நிதிநிலை வலுவாக இருக்கும். முதலீட்டில் இருந்து எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் உங்களைக் கொண்டு செல்லும்.
கன்னி ராசிக்கான பலன்கள்
அறிவாற்றலும் சிந்தனை திறனும் அதிகமாக இருப்பதால், நீங்கள் எடுக்கும் முடிவுகள், நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல பலனை கொடுக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவடையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரலாம்.
துலாம் ராசிக்கான பலன்கள்
கலை, ஊடகம் மற்றும் கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு, படைப்பு திறன் காரணமாக, தங்கள் திறமையை நிரூபித்து அதற்கான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். புதிதாக ஏற்படும் தொடர்புகள் மூலம் எதிர்காலத்தில் எதிர்பாராத ஆதாயத்தை பெறலாம். மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
மகர ராசிக்கான பலன்கள்
மன தெளிவு வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்கும் திறனை கொடுக்கும். நிதித்திர தன்மை சிறப்பாக இருக்கும். வருமானத்திற்கும் குறைவிருக்காது. புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். இது எதிர்கால முன்னேற்றத்திற்கு காரணமாக அமையலாம்.
மீன ராசிக்கான பலன்கள்
நவ பஞ்சம யோகம், வாழ்க்கையில் புதிய உயரங்களை தொட காரணமாக இருக்கும். வேலையை மாற்று விரும்புபவர்களுக்கு, பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்திற்கும் சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | குரு உதயம்: 5 ராசிகளின் வாழ்வில் அதி வேக முன்னேற்றம், வெற்றிகள் குவியும்
மேலும் படிக்க | வக்கிரமடையும் புதன் படுத்தி எடுப்பார்... ஆகஸ்ட் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ