)
Navaratri Festival 2025 Second Day: நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri) பண்டிகை, நேற்று அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுயுள்ளது. அதுமட்டுமின்றி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள். நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும். அதேபோல் கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.
நவராத்திரியின் (Navaratri 2025) ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்க்கை தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.
இன்று அதாவது செப்டம்பர் 23 ஆம் தேதி காலை 07.45 மணி முதல் 8.45 மணி வரையிலான நேரத்திற்குள் நைவேத்தியம் படைத்து, நவராத்திரி பூஜையை துவக்கி விட வேண்டும். அப்படி அந்த நேரத்தில் பூஜை செய்ய முடியாமல் போனால் மாலை 4.45 மணிக்கு மேல் நவராத்திரி பூஜை செய்துக் கொள்ளலாம். எனினும் ராகு காலம், எமகண்டம் போன்ற நேரத்தை தவிர்த்து பூஜை செய்யவும்.
இன்று வழிபட வேண்டிய தேவி: பிரம்மச்சாரிணி (நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கை, பிரம்மசாரிணி தேவி. மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. கோலம்: அரிசி மாவினால் பொட்டு வகை கோலம் இட வேண்டும்.)
இன்று போட வேண்டிய கோலம்: கட்டம் வகையிலான கோலம் போட்டு வழிபட வேண்டும்.
இன்று பயன்படுத்த வேண்டிய மலர்கள்: கதம்பம்
இன்று படைக்க வேண்டிய நெய்வேத்தியம் : பருப்பு பாயசம், பச்சை பயறு சுண்டல், வெண்பொங்கல் படைத்து வழிபட வேண்டும்
இன்று பாட வேண்டிய ராகம் கல்யாணி
பழங்கள்: பழங்களில் மாம்பழமும் படைக்க வேண்டும்.
இந்த நாளில் உங்கள் வீட்டில் பிரம்மச்சாரிணி தேவி இருந்தால் சாம்பல் நிற வஸ்திரத்தை அணிவித்து அலங்கரிக்க வேண்டும். அதேபோல் நாமும் சாம்பல் நிற உடை அணிந்து கொண்டு வழிபாடு செய்ய வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ