Ardha Kendra Yog 2026: ஜோதிடத்தின்படி, சனி பகவான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், நவகிரகங்களின் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். சனி பகவான் ஒரு ராசியில் மட்டும் சுமார் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். சனி பகவானின் நிலை பெரும்பாலும் எதிர்மறையான பலன்களை தரும் என கருதப்பட்டாலும் சில நேரங்களில் சில ராசிகளுக்கு நேர்மறையான பலன்களை வழங்குகிறது.
இந்த நிலையில், சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வரும் நிலையில், அவருடன் சுக்கிரன் சேர்ந்து கேந்திர யோகத்தை உருவாக்க உள்ளார். இந்த யோகம் வரும் ஜனவரி 28ஆம் தேதி நிகழ இருக்கிறது. சனியும் சுக்கிரனும் 45 டிகிரியில் சந்திக்கும்போது இந்த யோகம் உருவாகிறது. அர்ந்த கேந்திர யோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் உருவாவதால் மகத்தான நன்மைகளை வழங்க இருக்கிறது. இதனை குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அனுபவிக்க இருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்கள் அர்த்த கேந்திர யோகத்தால் நேர்மறையான பலன்களை பெற இருக்கின்றனர். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கு பலன் இருக்கும். பெரிய அளவில் வெற்றியை பெற முடியும். தொழிலில் புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வீர்கள். அதன் மூலம் லாபம் ஈட்ட முடியும். கையில் எடுக்கும் விஷயங்களில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி பிறக்கும்.
மகரம் (Capricorn)
மகர ராசிக்காரர்கள் அர்த்த கேந்திர யோகத்தால் வெற்றிகளை குவிக்க இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தொழிலில் நல்ல லாபம் ஈட்ட முடியும். அதிக சம்பளத்துடன் கூடிய வேலை கைக்கூடும். உங்களின் கடின உழைப்புக்கு தகுந்த பாராட்டு மற்றும் பலன்கள் கிடைக்கும். அதன் மூலம் நல்ல பெயர் மற்றும் மரியாதையும் கிடைக்கும். வணிகம் செய்பவர்களுக்கு இது ஏற்ற காலமாக இருக்கும். கூடுதல் வருமானத்திற்கு வழிகள் பிறக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். அதேபோல் வேலை மாற நினைப்பவர்களுக்கும் அது நடக்கும்.
மீனம் (Pisces)
மீன ராசிக்காரர்கள் அர்த்த கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெற இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் இவர்கள் நினைக்கும் அனைத்தும் நடக்கும். நீண்ட காலமாக தடைப்பட்டிருக்கும் வேலை முடியும். பரம்பரை சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் வாய்ப்புகள் வரும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள். துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மொத்தத்தில் அர்த்த கேந்திர யோகத்தால் மீனம், மகரம் மற்றும் ரிஷப ராசிக்காரர்கள் வெற்றி மற்றும் பணத்தை குவிக்க இருக்கின்றனர்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க: சந்திரன் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், புகழ் அதிகரிக்கும்
மேலும் படிக்க: இன்றைய ராசிபலன்: (ஜனவரி 22 - வியாழக்கிழமை) - செலவு நிறைந்த நாள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









