ஜூலை மாதம் தொடங்க இன்னும் சில நாட்களை உள்ளன. இந்நிலையில் ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் கிரக பெயர்ச்சிகள் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு, ராஜயோக பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்றும், இதனால் குறையாத அதிர்ஷ்டத்தை பெற்று, வளமாக வாழ்வார்கள் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ஜூலை மாத கிரக பெயர்ச்சிகள்
ஜூலை மாதத்தில் சில கிரகங்கள் பெயர்ச்சியாக உள்ளன. சில கிரகங்கள் தனது நிலையை மாற்றிக் கொள்ள உள்ளன. முதலில் ஜூலை மாதம் 9ம் தேதி, குரு பகவான் உதயம் ஆகிறார். ஜூலை மாதம் 13ம் தேதி சனி பகவான், மீன ராசியில் வக்ர நிலையை அடைகிறார். ஜூலை மாதம் 16ம் தேதி, சூரியனின் பெயர்ச்சியுடன் ஆடி மாதம் பிறக்கிறது. ஜூலை மாதம் 16ம் தேதி, சூரியன் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார். புத பகவான் ஜூலை மாதம் பதினெட்டாம் தேதி கடக ராசிக்கு செல்வதுடன், ஜூலை 24ம் தேதி அதில் அஸ்தமனம் ஆகிறார். அதோட ஜூலை 28ம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
ஜூலை மாத அதிர்ஷ்ட ராசிகள்
ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட ஆறு கிரகங்கள் தனது நிலையை மாற்றிக் கொள்கின்றன. அதோடு ஜூலை மாத தொடக்கத்தில், மிதுன ராசியில் சூரியன் குரு மற்றும் புதன் இணைந்து இருப்பதால், புத ஆதித்ய யோகமும், குரு ஆதித்ய யோகமும் உண்டாகியுள்ளது. கிரக பெயர்ச்சிகளால் உண்டாகும், சுப யோகங்களால், ராஜயோக பலன்களை பெறும் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்கான ஜூலை மாத பலன்கள்
வேலையில் தொழிலில் சிறந்த முன்னேற்றத்தை காணலாம். வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாக்கும். பணத்தை முதலீடு செய்ய வாய்ப்புண் விருப்பமும் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுன ராசிக்கான ஜூலை மாத பலன்கள்
மனதில் நம்பிக்கை அதிகம் இருக்கும். எதிர்பாராத வகையில் கிடைக்கும் பண வரவும் நல்ல செய்தியும், குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். பயணங்கள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். வீட்டில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து, மனதில் நிம்மதி பிறக்கும்.
துலாம் ராசிக்கான ஜூலை மாத பலன்கள்
வேலையில், தொழிலில் முன்னேற்றம் பெற வலுவான வாய்ப்புகள் உள்ளன. இலக்கை நோக்கி முன்னேறுவதில் வெற்றி பெறுவீர்கள். நிதி ஆதாயம் மூலம் பொருளாதார நிலை மேம்படும். தடைபட்ட வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள். இதனால் வரை கைக்கு வராமல் இருந்த பணம், எதிர்பாராத வகையில் வந்து சேரும்.
மகர ராசிக்கான ஜூலை மாத பலன்கள்
அலுவலகத்தில் திறமை கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். திடீர் பண ஆதாயங்கள் மகிழ்ச்சியை தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும், வசதி வாய்ப்புகளுக்கும் குறைவிருக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீன ராசிக்கான ஜூலை மாத பலன்கள்
உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையை நிரூபித்து, மேலதிகாரியிடம் இருந்து அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறுவார்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவியாளராக இருக்கும். மாணவர்களின் உயர்கல்வி கனவு நிறைவேறும். நிதி ஆதாயம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதால், உறவுகளில் இணக்கம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ