சர்ப்ப கிரகங்கள் அல்லது பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது, மே மாதம் 18ம் தேதி பெயர்ச்சி ஆகின்றன. எப்போதும் வக்கிர நிலையில் பெயர் இந்த நிழல் கிரகங்களின் பெயர்ச்சி, ஜோதிடத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இவை இரண்டுமே 18 மாதங்களுக்கு ஒரு முறை, தங்கள் ராசியை மாற்றிக் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் செல்கிறார். 2026 டிசம்பர் 5ஆம் தேதி வரை, இந்த இரு கிரகங்களும் இந்த ராசிகளில் சஞ்சரிக்கும். இதனால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெற்றிகளையும் அதிர்ஷ்டத்தையும், நல்ல விடியலையும் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை, இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
கவலை நீங்குவதால் உற்சாகம் பிறக்கும். சமூகத்தில் கௌரவம் மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும். எனினும் குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் தீரும்.
ரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
புதிய பொறுப்புகள் வந்து சேரும். இதனால் வேலை பளு அதிகரித்தாலும், திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனினும் வேலைக்கு நடுவில் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது அவசியம்.
மிதுன ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ஆன்மீக விஷயங்களில் நாட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். வெளிநாட்டு பயணங்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும். முதலீடுகள் லாபம் தரும்.
கடக ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
மனதில் தெளிவு ஏற்படும். பண விஷயம் தொடர்பாக சில சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால், பிரச்சனையை சமாளித்து விடலாம். எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இதனால் அனுகூலமும் உண்டாகும்.
சிம்ம ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
மனதில் குழப்பம் ஏற்படலாம். சந்தேகம் மனதை வாட்டலாம். ஆனால் இவற்றிற்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இவை உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் நிலை ஏற்படலாம்.
கன்னி ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
உடலை வாட்டி வந்த நோய்கள் தீர்ந்து நிம்மதி பிறக்கும். பிரச்சனைகள் தீரும். எதிரிகள் செய்யும் சதிகள் முறியடிக்கப்படும். தியானம் மற்றும் ஆன்மீகம் மீதான நாட்டம் அதிகரிக்கும்.
துலாம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
உத்தியோகஸ்தர்களுக்கு திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும்., சமூக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
விருச்சிக ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
வேலையில் தொழிலில் குழப்பம் ஏற்படலாம். எனினும் சிந்தித்து செயல்பட்டால் பிரச்சனைகள் தீரும். அசையா சொத்து வாங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும்.
தனுசு ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் சிறப்பாக இருக்கும். எனினும், வீட்டில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்படலாம். எனவே பேச்சில் கவனம் தேவை.
மகர ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
வாழ்க்கையில் ஏற்படும் சாதகமான மாற்றங்களால், மனதிற்கு அமைதி கிடைக்கும். பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்ப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
பேச்சில் கவனம் தேவை. விவாதங்களால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. குழப்பங்களை தவிர்க்க மனம் விட்டு பேசுவது நல்லது.
மீன ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல வாய்ப்பு வந்து சேரும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும். எனினும் உடல் நலத்தில் கவனம் தேவை.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 4 கிரகங்களின் வலுவான சஞ்சாரம்: பொக்கிஷ அதிர்ஷ்டம் கிடைக்கப்போகும் 3 ராசிகள்!
மேலும் படிக்க | ஷடாஷ்டக யோகம்... செவ்வாய் - ராகுவின் நிலையால் 4 ராசிகளுக்கு சிக்கல்கள் காத்திருக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ