பாவ கிரகங்கள் அல்லது சர்ப்ப கிரகங்கள் எனப்படும் ராகு கேது இரண்டும் எப்போதும் வக்கிர நிலையில் தான் நகர்கின்றன. இந்த இரு கிரகங்களின் பெயர்ச்சிகளும், அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிகள் இதனால் பெரும் பலன் அடைவார்கள்.
ராகு கேது பெயர்ச்சி கிரகங்கள் வரும் மே மாதம் 18ஆம் தேதி, மாலை 4:30 மணிக்கு பெயர்ச்சியாகின்றன ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகின்றன. இந்நிலையில் கும்பத்திற்கு செல்லும் ராகுவினால் வாழ்க்கையில் கோடி நன்மைகளைப் பெற்று, வாழ்க்கையில் நற்பலன்களை பெற்று முன்னேற உள்ள 4 ராசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசியினருக்கான ராகு பெயர்ச்சி பலன்கள்
கும்ப ராசிக்கு செல்லும் ராகு, அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார். திட்டமிட்டபடி இலக்குகளை அடைவதில் வெற்றி அடைவீர்கள். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எனினும் முதலீட்டு விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் துர்கை அம்மனுக்கு செய்யும் ராகு கால வழிபாடு நற்பனங்களை அடைய பெரிதும் உதவும்.
மிதுன ராசிக்கான ராகு பெயர்ச்சி பலன்கள்
ராகு பெயர்ச்சி அளிக்கும் நற்பலன்கள் காரணமாக, வேலைகள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் செயல் திறனை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். எனினும் கொஞ்சம் எச்சரிக்கையாக கவனமாக இருப்பதால் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெற்றிகள் கிடைக்க ராகு தேவன் அருள் புரிவார். ராகு பெயர்ச்சியின் பலன்களை முழுமையாக அடைய, புதன்கிழமைகளை கருப்பு செய்யலாம்.
தனுசு ராசிக்கான ராகு பெயர்ச்சி பலன்கள்
தனுசு ராசியினருக்கு வாழ்த்துகளை அள்ளித் தருவார் ராகு பகவான். வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த பயிற்சி நல்ல வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கும். அதிர்ஷ்டம் குறையாமல் இருக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எனினும், போட்டியாளர்கள் சதி செய்வார்கள் என்பதால் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் வழங்குவதும், தினமும் துர்கை அம்மனை வழிபடுவதும் ராகு பெயர்ச்சி பலன்களை முழுமையாக பெற உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
மகர ராசிக்கான ராகு பெயர்ச்சி பலன்கள்
ராகுவின் அருளால் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். உங்கள் வாக்குகளிலும் பேச்சுகளிலும் செல்வாக்கு செலுத்தும் ராகு, உங்கள் காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றி தருவார். எல்லோரும் விரும்பும் நபராக இருப்பீர்கள். த அனைவரும் மனதிலும் இடம் பிடித்துக் கொள்வீர்கள். எனினும் உடல் நலம் குறித்து அலட்சியமாக இருக்க வேண்டாம். ராகு பெயர்ச்சி பலன்களை முழுமையாக அடைய, சிவபெருமான் வழிபாடு கை கொடுக்கும். பிரதோஷ வழிபாடும், கிரகமும் நற்பலன்களை கொடுக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | வளங்கள் தரும் வைகாசி... சூரியன் குரு அருளால் ஜாக்பாட் பலன்களை பெரும் சில ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









