)
Rahu Transit 2026: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் ராசியை சீரான இடைவெளியில் மாற்றுகிறது. அனைத்து கிரகங்களிலும் சனி மிகவும் மெதுவாக பெயர்ச்சி அடையும். ஒவ்வொரு இரண்டரை வருடங்களுக்கு அதன் ராசியை மாற்றுகின்றன. ராகு மற்றும் கேது ஒவ்வொரு ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறையும் தனது ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில், ராகு பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றலை பெறுவார்கள்.
ராகு தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். 2026 டிசம்பர் மாதம் மகர ராசிக்குள் நுழைவார். அதே நேரத்தில் கேது தற்போது சிம்ம ராசியில் இருக்கிறார். ஆனால் டிசம்பர் 2026 இல் கடக ராசிக்குள் நுழைவார். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை இளமை பருவத்தில் ராகு பகவான் சஞ்சரிப்பார். அப்படி ராகு பகவான் சஞ்சரிக்கும்போது அவரின் பலம் அதிகமாகவே இருக்கும். சுமார் நூறு நாட்களுக்கு, ராகு மிகவும் சக்திவாய்ந்தவராக இருப்பார். இதனால், சில ராசிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். ஜோதிடத்தின் படி, ராகு கிரகத்தின் இந்த தாக்கம் நான்கு ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு நிறைய சிரமங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.
மேஷ ராசியில் ராகுவின் பலம் அதிகமாக இருக்கும். இதனால், மேஷ ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திப்பார்கள். மேஷ ராசியில் பிறந்தவர்கள் பணப் பிரச்னையை எதிர்கொள்வார்கள். ராகுவின் அருளைப் பெற முடியாது. இதன் காரணமாக, உங்கள் செலவுகள் நிறைய அதிகரிக்கும். கடனில் சிக்க வாய்ப்புள்ளது. தங்கள் குழந்தைகளைப் பற்றி அதிகம் கவலைப்பட வாய்ப்புள்ளது. எனவே, கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். தொழிலில் இந்த காலக்கட்டத்தில் நீங்கள் எடுக்கும் முடிவால் பல பிரச்னைகளை சந்திப்பீர்கள். எனவே, நிதானமான முக்கிய முடிவுகளை எடுப்பது சிறந்தது.
ராகு தனது இளமைப் பருவத்தில் சஞ்சரிப்பதால் மகர ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடக ராசியில் பிறந்தவர்கள் இந்த காலகட்டத்தில் உடல்நலத்தில் பிரச்னைகளை சந்திக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முதலீடுகளில் நஷ்டம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும், பணியிடத்தில் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது சிறந்தது.
ராகுவின் பலத்தால் சிம்ம சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் அதிக சிரமங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். எனவே, இந்த காலகட்டத்தில், சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செலவுகள் அதிகரிக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. முதலீட்டில் பெரும் இழப்புகளை நீங்கள் சந்திப்பீர்கள். தன்னம்பிக்கை குறையக் கூடும். தொழில் தொடர்பான பெரிய வாய்ப்புகளை உங்கள் கைகளை விட்டு நழுவும் வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடல்நலனில் ஏற்ற இறக்கம் காணப்படலாம். குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
ராகு பெயர்ச்சியால் பெரிய பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். பணப் பிரச்னையை எதிர்கொள்வீர்கள். மேலும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும். எனவே அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உறவுகளில் அதிகமாக கருத்து முரண்பாடுகளால் மன அமைதியை பாதிக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். காதல் விவகாரத்தில் சில பிரச்னைகளை சந்திக்கலாம். கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் அதிகரிக்கலாம். திருமண நினைப்பவர்கள் குடும்பத்தின் ஒப்புதலை பெற சில தடைகள் எதிர்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.