இன்னும் 5 நாட்களில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், அதிர்ஷ்ட மழை

Rahu Peyarchi 2025 in Kumbh: வருகிற மே 18 ஆம் தேதி கும்ப ராசியில் ராகு பெயர்ச்சி அடையப் போகிறார். மீன ராசியில் பயணித்து வந்த ராகு பின்னோக்கி பெயர்ச்சி அடைகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 13, 2025, 07:58 PM IST
  • மீன ராசியில் பயணித்து வந்த ராகு
  • வருகிற மே 18 ஆம் தேதி கும்ப ராசியில் ராகு பெயர்ச்சி
இன்னும் 5 நாட்களில் ராகு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், அதிர்ஷ்ட மழை

Rahu Transit 2025: ஒன்றரை வருட நீண்ட காலத்திற்குப் பிறகு தற்போது ராகு தனது ராசியை மாற்றப் போகிறார். ராகு மீன ராசியை விட்டு வெளியேறி பின்னோக்கி கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு மே 18 ஆம் தேதி மாலை 5:08 மணிக்கு நடைபெறவிருக்கும். ராகு பெயர்ச்சி பொதுவாக ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை நீடிக்கும். இந்த நேரத்தில் ராகு பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். கும்ப ராசியில் ராகு பெயர்ச்சி அடைவதால் கடகம், விருச்சிகம் உள்ளிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு அசுப பலனைத் தரும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சினைகள் எழக்கூடும். எனவே எந்த 5 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த கட்டுரையில் காணலாம்.

ரிஷப ராசி: ராகு ரிஷப ராசியின் பத்தாவது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். சில தவறுகள் ஏற்படலாம். அவசர முடிவுகளை தவிர்க்கவும். வேலையை மற்றம் ஏற்படலாம். பணியிடத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் நீடிக்கலாம். குடும்ப நிகழ்வுகளில் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது சில புகார்களை வைக்கலாம். உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு, ராகுவின் பெயர்ச்சி எட்டாவது வீட்டில் நடக்கும். இங்கு ராகுவின் இருப்பு கடக ராசிக்காரர்களுக்கு சில உடல்நலம் பிரச்சனைகளையும் சிரமங்களையும் தரலாம். மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் தொற்றுநோயால் பாதிக்கப்படலாம் அல்லது உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கலாம். எதிர்காலத்தில் கடுமையான நோயையும் தவிர்க்க முன்கூட்டியே மருத்துவரை அணுக வேண்டும். கணவரின் குடும்பத்தின் தலையீட்டை அதிகமாகும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். இதனால் நிதி இழப்பீடு ஏற்படலாம். திடீரென்று சில சொத்து அல்லது பரம்பரைச் சொத்தைப் வாங்கலாம். ராகுவின் பெயர்ச்சியின் போது மத நம்பிக்கையில் இருக்கவும்.

சிம்ம ராசி: ராகு சிம்ம ராசியின் ஏழாவது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். ராகுவின் பெயர்ச்சி கலவையான பலன்களைத் தரும். திருமண வாழ்க்கையில் கவனம் தேவை. பல தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும், இதன் காரணமாக உறவில் பதற்றம் ஏற்படலாம். கருத்து வேறுபாடு ஏற்படலாம். வேலையில் சில மாற்றங்கள் ஏற்படும். இதனால் சிக்கல் ஏற்படலாம். சட்டவிரோதமாக எதையும் செய்ய வேண்டாம்.

விருச்சிக ராசி: ராகு விருச்சிக ராசியின் நான்காவது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சியின் தாக்கம் உங்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடும். குடும்பத்தில் நல்லிணக்கமின்மை மற்றும் அன்பின் உணர்வு குறையலாம். மார்பு தொற்று அல்லது பிற பிரச்சினைகள் ஏற்படலாம்.

மீன ராசி: ராகு பெயர்ச்சி மிகவும் முக்கிய பலனைத் தரும். நேர்மறை மற்றும் எதிர்மறை முடிவுகளைக் காணலாம். தொற்று நோய்களால் பாதிக்கப்படலாம் மற்றும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். நிதி இழப்பு ஏற்படக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 4 கிரகங்களின் வலுவான சஞ்சாரம்: பொக்கிஷ அதிர்ஷ்டம் கிடைக்கப்போகும் 3 ராசிகள்!

மேலும் படிக்க | ஷடாஷ்டக யோகம்... செவ்வாய் - ராகுவின் நிலையால் 4 ராசிகளுக்கு சிக்கல்கள் காத்திருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News