வேத ஜோதிடத்தின்படி, நிழல் கிரகமான ராகுவின் பெயர்ச்சி, ஒவ்வொருவரின் வாழ்விலும் திடீர் மற்றும் எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வரும் சக்தி வாய்ந்தது. ஒருவர் செய்த நன்மை, தீமைகளுக்கு ஏற்ப, பாரபட்சமின்றி பலன்களை அள்ளி கொடுப்பவர் ராகு. அந்த வகையில், வரும் டிசம்பர் 2 அன்று, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:11 மணிக்கு ராகு தனது ராசியை மாற்றுகிறார். தற்போது பூர்வ பாத்ரபாத நட்சத்திரத்தில் பயணிக்கும் ராகு, சதய நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்குள் நுழைகிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் இந்த முக்கிய பெயர்ச்சி, குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வத்தையும், தொழில் முன்னேற்றத்தையும், மன நிம்மதியையும் வாரி வழங்க போகிறது.
மேலும் படிக்க: ராகு-சுக்கிர நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்!
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி ஒரு பொற்காலமாக அமைய போகிறது. இதுவரை பல முயற்சிகள் செய்தும், தொடர்ந்து தடைகளை சந்தித்து வந்தவர்களுக்கு, இனி வெற்றி தேடி வரும். வியாபாரத்தில் நினைத்து பார்க்காத அளவுக்கு மிக பெரிய லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பதவி உயர்வு, சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, மன குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். உங்கள் ஆளுமை திறன் பன்மடங்கு அதிகரித்து, சமூகத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி மிக சிறந்த பலன்களை தரப்போகிறது. நீண்ட நாட்களாக பாதியில் நின்ற வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உங்கள் கடின உழைப்புக்கு முழுமையான பலன் கிடைக்கும். பணியிடத்தில், உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பல நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உருவாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, மன அமைதி பெருகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி மிகவும் சாதகமான பலன்களை அள்ளித் தரும். செய்யும் தொழிலில், உத்தியோகத்தில் திடீர் வெற்றிகள் உண்டாகும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த முயற்சிகளுக்கு இப்போதுதான் பலன் கிடைக்கப் போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். தொழிலதிபர்கள், தாங்கள் செய்யும் பெரிய முதலீடுகள் மூலம் அமோகமான லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் ஸ்திரத்தன்மை ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரித்து, மன திருப்தியுடன் காணப்படுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமோ அல்லது புதிய துறையில் வேலை பார்க்கும் வாய்ப்போ கிடைக்கக்கூடும்.
மேலும் படிக்க: புதன் வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு தலைவிதி மாறப்போகிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









