தினசரி ராசிபலன் - இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஏப்ரல் 02, 2023க்கான மேஷம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.  

Written by - RK Spark | Last Updated : Apr 2, 2023, 06:26 AM IST
  • வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
  • பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.
  • உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொண்டால் உயர்வு கிட்டும்.

Trending Photos

தினசரி ராசிபலன் - இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை! title=

அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

இன்றைய  பஞ்சாங்கம்

02-04-2023, ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி திதி மாலை 06.10 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூரம் நட்சத்திரம் பின்இரவு 02.22 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 02.22 வரை பின்பு அமிர்தயோகம். பௌர்ணமி விரதம் (வாக்கியம்). ஹோலிப் பண்டிகை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேலும் படிக்க | அட்சய திரிதியை இந்தாண்டு எப்போது வருது? நல்ல நேரம் எப்போது?

இன்றைய ராசிபலன் -  02.04.2023

மேஷம்
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்பத்தில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் உதவியுடன் சுமூகமாக முடியும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.

மிதுனம்
இன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும்.

கடகம்
இன்று உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொண்டால் உயர்வு கிட்டும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

கன்னி
இன்று உங்களுக்கு நெருங்கியவர்களால் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம்
இன்று வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். மனைவி வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

விருச்சிகம்
இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை கூடும்.

தனுசு
இன்று வியாபார ரீதியாக பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் ஏற்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மகரம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தள்ளி வைக்கவும். பயணங்களில் கவனம் தேவை.

கும்பம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும்.

மீனம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதன் மூலம் லாபம் பெருகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மேலும் படிக்க | எண் ‘8’ மற்றும் ‘ஏழரை’ சனீஸ்வரருக்கும் உள்ள தொடர்பு! எட்டுக்கு அருள்புரிவார் சனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News