Astrology: சமசப்தக ராஜயோம்: கிரகங்களின் பெயர்ச்சியானது ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவை ஒன்றுடன் ஒன்று இணைந்தோ அல்லது குறிப்பிட்ட தொலைவில் சந்தித்துக்கொண்டாலோ சுப யோகங்கள் உருவாகின்றன. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 05) செவ்வாய் மற்றும் சந்திரன் ஏழாம் பார்வையாக பார்த்ததால் சமசப்தக ராஜயோகம் உருவானது. அதாவது, ஒரு கிரகம் தனது ராசியில் இருந்தபடியே ஏழாம் ராசியில் இருக்கும் மற்றொரு கிரகத்தை சந்திப்பதே சமசப்தக ராஜயோகம் ஆகும். இந்த யோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல பலன்களை ஏற்படுத்த இருக்கிறது. அவை எந்தெந்த ராசிகள் எந்த மாதிரியான பலன்களை ஏற்படுத்த இருக்கிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மிதுனம் (Gemini)
மிதுன ராசிக்காரர்களுக்கு சமசப்தக ராஜயோகம் பல நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது. இந்த யோகத்தால் நல்ல நாட்கள் தொடங்கும். வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். கடின பணிகளை கூட உங்கள் சாமர்த்தியத்தால் எளிதில் முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்லிணக்கம் அதிகரிக்கும். பணியிடத்தில் பணி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. சகோதர சகோதரிகளால் ஆதாயங்கள் கிடைக்ககூடும்.
சிம்மம் (Leo)
சமசப்தக ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல்வேறு வழிகளில் நன்மைகள் கிடைக்கும். வேலையில் நீங்கள் விரும்பிய இடத்திற்கு மாறக்கூடும். உயர் அதிகார்களிடம் இருந்து முழுமையான ஆதரவு கிடைக்க பெறலாம். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிதி தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக முடிய வாய்ப்பிருக்கிறது. வேலையில் இருக்கும் மன அழுத்தங்கள் நீங்கும். நிம்மதியான சூழல் ஏற்படும். மேலும், புதிய வழிகள் பிறக்கும். அதன் மூலம் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் .
துலாம் (Libra)
சமசப்தக ராஜயோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. உங்கள் பணம் எங்காவது சிக்கி இருந்தால் அதன் பிரச்சனை தீர்ந்து உங்கள் கைக்கு பணம் வந்து சேரும். புதிய வேலையை தொடங்க நினைப்பவர்கள் இந்த காலத்தில் தொடங்கலாம். உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டு பல நன்மைகள் கிடைக்க பெறலாம். உடன் வேலைப் பார்ப்பவர்களிடம் இருந்த மன கசப்புக்கள் நீங்கி அனுகூலமான காலமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மேலும், தொழில் தொடர்பான முதலீடு முடிவுகள் சாதமாக அமைய வாய்ப்பிருக்கிறது.
தனுசு (Sagittarius)
சமசப்தக ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும். இந்த யோகத்தால் உங்களுக்கு பல வெற்றிகள் கிடைக்க இருக்கின்றன. பணியிடத்தில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு மதியாதை அதிகரிக்கும். சொத்துக்கள், நகை, நிலம், ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். இதனால் உங்களுக்கு நிம்மதி ஏற்படும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம் (Aquarius)
கும்ப ராசிக்காரர்களுக்கு சமசப்தக ராஜயோக ஆடம்பரத்தை அளிக்கொடுக்கும். கடனை அடைப்பதற்கான நல் வாய்ப்புகள் கிடைக்கும். மன அமைதி பிறக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வரும். நற்செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறும். வீடு அல்லது மனை வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்களது ஆரோக்கியம் மேம்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க: இந்த 4 ராசிக்காரர்களுக்கு இப்படி ஒரு சக்தியா? இவர்களிடம் ஜாக்கிரதையாதான் இருக்கணும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









