)
சனி பெயர்ச்சி 2025: கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி, கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சென்ற சனி பகவான், வரும் 2027 ஜூன் மாதம் வரை, மீன ராசியில் இருப்பார். அதன் பின்னர் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆவார். சனிபகவானின் மேஷ ராசி பெயர்ச்சி வரை, சிம்ம ராசியினருக்கு அஷ்டம சனி காலம். பாடாய்படுத்தும் அஷ்டம சனி காலத்தில், சிம்ம ராசியினர் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதையும், அதற்கான பரிகாரங்களையும், இந்தப் பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சி காரணமாக, சிம்ம ராசியினருக்கு அஷ்டம சனி தொடங்கியுள்ள நிலையில், எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. திடீர் முடிவுகளை எடுக்கும் போக்கை நிச்சயம் கைவிடுவது நல்லது. சந்தேகம் மற்றும் பிடிவாத குணத்தை கைவிட்டால் பிரச்சனையை சமாளிக்கலாம். உங்கள் வேலையில் கவனம் செலுத்தி, மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் நல்லது. வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கலாம். பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
நிதானத்தை கடைபிடிப்பதால் எதிர்காலத்தில் பலன் பெறலாம்
அஷ்டமத்து சனி காலத்தில், மிகக் கடினமாக இரவு பகல் என உழைத்தாலும், நல்ல பெயர் கிடைப்பது கடினம். இருந்தாலும் பொறுமையாக இருப்பதால், எதிர்காலத்தில் இதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். எனவே மனக்கவலையை ஒதுக்கி வைத்து விட்டு, உங்கள் வேலையை தொடருங்கள். தேவையில்லாத விஷயத்தை நினைத்து, மனதை குழப்பிக் கொள்ளாமல், கடவுளிடம் உங்கள் மன பாரத்தை போட்டு விட்டு நிம்மதியாக இருக்கவும். பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது
சிம்ம ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
சிம்ம ராசியினருக்கு அஷ்டமத்து சனி காலம் என்பதால், சனிக்கிழமையன்று சனி ஓரை காலத்தில் திருக்கொள்ளிக்காட்டு ஈசனை வழிபாடு செய்வதும், சனிபகவானுக்கு எள்ளு சாதம் தயாரித்து, சமர்ப்பித்து பூஜிப்பதும், எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பலன் தரும். தானத்தில் சிறந்தது அன்னதானம், ஏழைகள் எட்டு பேருக்கு அன்னதானம் செய்வதால் கர்ம வினைகள் தீர்ந்து அஷ்டமத்து சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
சனிபகவான் மனதை குளிர்விக்கும் சில எளிய பரிகாரங்கள்
பொதுவாக சனி பகவான் கடின உழைப்பாளிகளையும், கருணை மனம் படைத்தவர்களையும் சோதிக்க மாட்டார். எனவே ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்தல், வாட்டத்தில் இருப்பவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்தல், பலனை எதிர்பார்க்காமல் கடின உழைப்பை தொடர்தல் ஆகியவை, சனிபகவானின் மனதை குளிர்வித்து, அஷ்டமத்து சனியின் கெடு பலன்கள் நீங்கி, நிம்மதியான வாழ்வை பெற உதவும். நேர்மையும் கடின உழைப்பையும் இரு கண்களாகக் கொண்டு எந்த விதியையும் மீறாமல் எல்லோருக்கும் பலன் தரும் வகையிலான, வாழ்க்கையை வாழ்வதால் சனி பகவானின் அருளை பரிபூரணமாக பெறலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ