Kumbam Rasi Sani Peyarchi Palan 2025: இந்த சனி பெயர்ச்சி என்பது கும்ப ராசியை பொறுத்தவரை, கொஞ்சம் அலைச்சலையும், சுபவிரயங்களையும் தந்தாலும் உங்கள் முயற்சியும் கடமை உணர்வும் உங்களுக்கு வெற்றியைத் தரும். கும்ப ராசி 2025 சனி பெயர்ச்சி பலன்கள் குறித்து பார்ப்போம்.
சனி பெயர்ச்சி 2025: கும்பம்
கும்ப ராசிக்காரர்களே இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம சனியாக அமர்ந்திருந்த சனி பகவான் இனி உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு பாத சனியாக இடம்பெயர்க்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான பணிச்சுமையால் பல சோதனைகளை அனுபவித்து வந்து இருப்பீர்கள். சிலர் வேலை இழப்பால் செய்வதறியாது பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வந்திருப்பார்கள். பொருளாதார பிரச்சனையால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டு இருக்கும். பணப்பிரச்சனைகள் ஒரு பக்கம் என்றால், ஆரோக்கிய பாதிப்பால் மருத்துவ செலவுகள் மறுபக்கம் என வீண் விரயம் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் படிப்பு வண்டி வாகனம் வீட்டு பராமரிப்பு செலவு என வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் மனக்கவலையில் வாழ்ந்து வந்திருப்பீர்கள். ஆனால் அந்த நிலை இனி மாற இருக்கிறது. நிச்சயம் முன்பை விட நல்ல மாற்றத்தை இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு தரும் என நம்பலாம்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் அமர்வதால் செலவுகள் அதிகரிக்கும் வாக்குஸ்தானத்திற்கு சனி வருவதால் வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். முடிந்தவரை அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கான நட்சத்திரத்திற்குரிய சனி பெயர்ச்சி பலன்கள்
கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் - அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்கு பின் முடியும். வண்டி வாகன செலவுகள் வரலாம். சிலர் பழைய வண்டியை கொடுத்துவிட்டு. புது வண்டி வாங்குவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சிலருக்கு அமையும். நீதிமன்ற தீர்ப்பு சாதகமாகும். சில புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும்.
கும்ப ராசி சதயம் நட்சத்திரம் - நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். இல்லத்தரசிகளை பொறுத்தவரை மனக்குறைகள் நீங்கும். இதுவரை பிரிந்து இருந்த கணவன் மீண்டும் உங்களை புரிந்து கொண்டு சமாதானமாக வருவார். கடன் பிரச்சனை தீரும்.
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் - இந்த காலகட்டத்தில் நீங்கள் எதை செய்தாலும் சற்று யோசித்து செய்தால் வெற்றி பெறலாம். எதிர்பாராத திடீர் பயணங்களால் அலைச்சல் செலவுகள் வந்து போகும். அலுவலகம் செல்லும் பெண்களை பொறுத்தவரை பணிச்சுமை குறையும். சம்பளம் உயரும் கன்னிப்பெண்களைப் பொறுத்தவரை கல்வி வேலை என அனைத்திலும் வெற்றி கிட்டும்.
கும்ப ராசிக்குரிய பொது பலன்கள்
கும்ப ராசி பொது பலன்கள் குறித்து பார்த்தால், தொழில் செய்வோர் இனி உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடு செய்வீர்கள். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். கணினி துறையினர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மெண்டல் ஸ்ட்ரெஸ் ஏற்படலாம்.
அரிசி, பருப்பு, பாத்திரக்கடை, சலூன், ஹோட்டல், இரும்பு பெகுலேஷன், கண்ணாடிக்கடை, துணிக்கடை வைத்திருப்பவர்களுக்கு இது நல்ல சனி பெயற்சியாகும்.
கும்ப ராசிக்குரிய சனி பகவான் பார்வை பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்கு, எட்டு மற்றும் 11 ஆம் இடங்களை பார்வை செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டை பார்ப்பதால் நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தை பார்ப்பதால் தேவையில்லாமல் மற்றவர் பிரச்சனையில் தலையிட வேண்டாம். சில நேரங்களில் வேலையில் அலைச்சலும் மன உளைச்சலும் உண்டாகும். கடன் பிரச்சனை அதிகரிக்கும்.
சனி பகவான் உங்கள் 11 ஆம் வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். திடீரென ஷேர் மூலம் நஷ்டம் வரலாம். மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி கொஞ்சம் அலைச்சலையும் சுபவிரயங்களையும் தந்தாலும் உங்கள் முயற்சியும் கடமை உணர்வும் வெற்றியைத் தரும்.
கும்ப ராசிக்குரிய சனி பெயர்ச்சி பரிகாரங்கள்
தேய்பிறை அஷ்டமி நாளில் சீர் காளி சட்டைநாதர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அஷ்டபைரவருக்கு அபிஷேகம் செய்து எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். வீண் அலைச்சல் தவிர்க்கப்படும்.
மேலும் படிக்க : சனி பெயர்ச்சி 2025: தனுசு ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2025: விருச்சிகம் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2025: துலாம் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2025: கன்னி ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









