சனி பெயர்ச்சி 2025: மேஷ ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

Sani Peyarchi News In Tamil: எப்பொழுதுமே ஏழரை சனி என்பது வயதிற்கு ஏற்றார் போல தான் பலன்களை கொடுக்கும். தற்போது ஏழரை சனி காலம். மேஷம் ராசிக்காரர்களுக்கும் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 8, 2025, 04:08 PM IST
சனி பெயர்ச்சி 2025: மேஷ ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

Mesham Sani Peyarchi Palan 2025: இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 தேதி சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். சனி பகவான் என்பது விரைய சனி என்று சொல்லக்கூடியது. இந்த விரையச் சனி நன்மையை செய்யுமா? அல்லது தீர்மையை செய்யுமா? மேஷ ராசிக்காரர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து விவரங்களை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

சனி பெயர்ச்சி 2025: மேஷம்

மேஷம் ராசிக்காரர்களே இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான் இப்போது விரையச்சனியாக, அதாவது ஏழரை சனியின் தொடக்கமாக வருகிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 12ல் மறைவதால் முன்பு போல வேகம் காட்டுவதை விடுத்து விவேகத்துடன் செயல்படுவது நல்லது. ஏழரை சனி தொடங்குகிறதே என்ற பயம் வேண்டாம் கடுமையாய் உழைத்தால் சனி என்றும் நன்மையே செய்வார். 

மேலும் உங்கள் வாழ்வில் சனி இரண்டாம் முறையாக வந்தால் அதிக பாதகம் செய்ய மாட்டார். சுபவிரயத்தையே தருவார். அதாவது குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வது, வீடு கட்டுவது அல்லது திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் மூலம் சுபவிரயங்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் உறவுகளுக்குள் பிரச்சனைகள் வருவது சகஜம். குறிப்பாக கணவன் மனைவிக்குள் சிறு சண்டைகள் பிரச்சனைகள் வரும்போது இருவரும் மனம் விட்டு பேசினால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். 

சனி பெயற்சி காலத்தில் மனதை அமைதியாக வைக்கத் தவறினால் கஷ்டங்கள் அதிகமாகும். அதனால் பொறுமை காப்பது அவசியம். ஏழரை சனி தொடங்குவதால் எந்த பெரிய முடிவையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. 

12 ஆம் இடத்திற்கு சனி வருவதால் வரவை விட செலவுகள் அதிகரிக்கும். உடல் அசதி உண்டாகும். வேலைப்பழுவால் ஓய்வு எடுக்க முடியாமல் உடல்நலம் பாதிக்கப்படலாம். அதனால் குறித்த நேரத்தில் உணவும் ஓய்வும் அவசியம். சிலருக்கு கண்களில் நீர், காலில் காயம், சுழுக்கு போன்ற பிரச்சனைகள் வந்து போகலாம். சிலருக்கு திடீர் வேலை இழப்பும் ஏற்படலாம். 

மேஷ ராசி நட்சத்திரத்திற்குரிய சனி பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் தக்க சமயத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மேஷ ராசி பரணி நட்சத்திரம் பூர்வீக சொத்து கைக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு அரசு வேலை கிடைக்கும் எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு பழைய வீட்டை விற்றுவிட்டு புது வீடு வாங்குவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். சிலருக்கு திருமணம் தடைபடும். பழைய பாக்கிகள் வர தாமதமாகும். 

மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் அடகு வைத்த தங்க நகைகளை மீட்பீர்கள். மனதில் தேவையில்லாத கவலைகள் தோன்றி மறையும். போட்டி பொறாமைகளையும் மீறி ஓரளவு தொழிலில் சாதிப்பீர்கள். சமயங்களில் அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படும். இந்த காலகட்டத்தில் மற்றவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சிலர் புது செல்போன், லேப்டாப், புது பைக் வாங்குவீர்கள்.

மேஷ ராசிக்கான சனி பெயர்ச்சி பொது பலன்கள்

கடைகள் வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் இது யோகமான காலமாகும். அலுவலகத்தில் வேலை செய்வோரை பொறுத்தவரை பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டை பார்ப்பதால் சமயத்தில் தேவையில்லாத வீண் விரயங்கள் வரலாம். குடும்பத்தில் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. 

சனி பகவான் ஆறாம் வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்சனை அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் சில சங்கடங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்தை விற்கும் நிலை உண்டாகும். கடுமையான அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சனி பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டை பார்ப்பதால் தந்தை உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். 

மேஷ ராசிக்காரர்களுக்கான சனி பெயர்ச்சி பரிகாரங்கள்

சனிக்கிழமை அன்று சனி கோரையில் திருநல்லாறு ஈசனை வழிபட்டுவிட்டு சனி பகவானுக்கு எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து, எட்டு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள். விரையச் செலவு குறையும்.

மேலும் படிக்க - மீன ராசியில் நான்கு கிரகங்கள்: பல வருடங்களுக்குப் பிறகு நிகழும் அதிசயம்..மகத்தான அருளைப் பெறும் 3 ராசிகள்!

மேலும் படிக்க - வார ராசிபலன் மார்ச் 10 முதல் 16 வரை: அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிக்காரர்கள்.. என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்?

மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025... ஏழரை நாட்டுச் சனியில் சிக்கும் ராசிகளும்... சில எளிய பரிகாரங்களும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News