Kadagam Sani Peyarchi Palan 2025: கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி காலகட்டம் பாதிப்பு தருமா? அல்லது பாதிப்பு தராதா? எந்த மாதிரியான வழிமுறைகள் செய்தால் சனி பெயர்ச்சிலிருந்து விடுபடலாம். மிதுனம் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து பார்ப்போம்.
சனி பெயர்ச்சி 2025: கடகம்
கடக ராசிக்காரர்களே இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் இருந்த சனி பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் இனி எல்லாவற்றிலும் வெற்றிதான். சகல பாக்கியங்களும் உண்டாகும். கடந்த மூன்று ஆண்டுகள் அஷ்டம சனி உங்களை படாத பாடுபடுத்தி இருக்கும். பலவிதமான கசப்பான அனுபவத்தையும் பயத்தையும் தந்திருக்கும்.
கணவன் மனைவி பிரிவு, பிள்ளைகளின் பிடிவாதம், நோய், கடன் என தொடர்ந்து அடிபட்டு மனக்கவலையில் உழன்று இருப்பீர்கள். சில நோயால் படாத பாடுபட்டு இருப்பீர்கள். சிலர் நல்லது செய்து கெட்டதை பரிசாக வாங்கி இருப்பீர்கள். திடீர் வேலை இழப்பால் வருமானம் இன்றி துன்பப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இனி இந்த நிலையெல்லாம் மாறப்போகிறது.
இறையருளால் இனி எல்லாம் ஜெயமே இது உங்களுக்கு யோக காலமாகும். இனிமேல் நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இந்த சனிப்பெயற்சி மூலம் எல்லா காரியத்தையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.
கடக ராசிக்கான நட்சத்திரத்திற்குரிய சனி பெயர்ச்சி பலன்கள்
கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் அலுவலகம் செல்வோருக்கு பணி நிரந்தரம் உறுதியாகும். மாணவ மாணவிகள் உயர்கல்வியில் சாதனை படைப்பீர்கள். அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய கடனை தீர்ப்பீர்கள். சொந்த வீடு வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளி பிரச்சனைகள் தீரும்.
கடக ராசி பூசம் நட்சத்திரம் சிறு தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் வரும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இல்லத்தரசிகள் தங்க நகைகள் வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். செய்யும் செயலில் பேரும் புகழும் கிடைக்கும். உத்தியோக உயர்வும், பதவி உயர்வும் உண்டாகும். மனதிற்கு சந்தோஷம் தரும் நிகழ்வுகள் நடக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும்.
கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் ஏதோ ஒரு வகையில் பணவரவு வந்து கொண்டே இருக்கும். அரசு அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சிலர் மேல் படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தந்தை உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கடக ராசிக்கான பொது பலன்கள்
கடக ராசி பொது பலன்கள் மூலம் உணவகம், கூல் ட்ரிங்க்ஸ், முடி திருத்தகம், மெடிக்கல், பேங்க் ஊழியர், ஆசிரியர், பாஸ்மதி அரிசி மற்றும் எண்ணெய் தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் வரும். அலுவலகத்தில் வேலை செய்வோருக்கு இனி நல்ல காலம்தான். உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் மேலதிகாரி மாற்றலாகி வருவார். இதுவரை கிடைக்காத நியாயமான சலுகைகள் இனி கிடைக்கும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும்.
கடக ராசிக்கான சனி பகவான் பார்வை பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்று ஆறாம் இடங்களை பார்வை செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டை பார்ப்பதால் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். அலுவலகத்தில் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரும். அதனால் வீண் அலைச்சலும் மன உளைச்சலும் உண்டாகும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை பார்ப்பதால், உங்களை எதிர்த்தோர் தோல்வியை தழுவுவார்கள். சிலருக்கு பணி மாற்றம் ஏற்படும். கோர்ட் கேஸ் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதரர்கள் மனக்கசப்பு ஏற்படலாம் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் பர்சனல் விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்க்கவும்.
கடக ராசிக்கான சனி பெயர்ச்சி பரிகாரங்கள்
உங்களுக்கு உண்டான பரிகாரங்கள் பௌர்ணமி நாளில் ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் சிவபெருமானை வழிபடுங்கள். வாழ்க்கையில் பெரும் மாற்றம் வரும்.
மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: மிதுன ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: ரிஷப ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: மேஷ ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









