Sani Peyarchi News In Tamil: மிதுன ராசி நேயர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? மிதுன ராசிக்காரர்களுக்கும் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.

Mithunam Sani Peyarchi Palan 2025: மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி காலகட்டம் பாதிப்பு தருமா? அல்லது பாதிப்பு தராதா? எந்த மாதிரியான வழிமுறைகள் செய்தால் சனி பெயர்ச்சிலிருந்து விடுபடலாம். மிதுனம் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து பார்ப்போம்.
சனி பெயர்ச்சி 2025: மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான் நீங்கள் எத்தனைதான் கடினமாக உழைத்தபோதும் சரியான அங்கீகாரம் இல்லாமல் கையில் காசும் தங்காமல் உங்களுக்கு அலைச்சலும் குடும்பத்தை விட்டு பிரிந்து ஊர் ஊராக சுற்றவும் வைத்திருக்கலாம்.
ஆனால் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டுக்கு சனி பகவான் வருகிறார். இனி எல்லாம் நல்லதே நடக்கும் தொட்டது துலங்கும். பிதுர்வழி சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.
மிதுன ராசிக்கான நட்சத்திரத்திற்குரிய சனி பெயர்ச்சி பலன்கள்
மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் புது வீடு, வண்டி வாகன யோகம் உண்டாகும். வீடு கட்ட எதிர்பார்த்த லோன் சாங்சன் ஆகும். சிலருக்கு நிலைமாற்றம் ஏற்படும். புது செல்போன் மற்றும் வீட்டுக்கு தேவையானவற்றை எல்லாம் வாங்குவீர்கள்.
மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் திடீர் யோகம் உண்டாகும். திருமணம் கிரகப்பிரவேசம் என வீடு கலைகட்டும். அயல்நாடு சென்று வருவீர்கள். திடீர் செல்வாக்கும் பணப்புழக்கமும் தங்க நகையும் வாங்குவீர்கள். அரசாங்கம் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் இதுவரை உற்சாகம் இல்லாமல் சோர்வாகவும் சலிப்பாகவும் இருந்தவர்கள் இனி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு நல்ல ஆதாயம் ஏற்படும். உங்கள் நிர்வாகத் திறமையால் திடீர் பதவி உயர்வு கிடைக்கும். சம்பளமும் அதிகரிக்கும்.
மிதுன ராசிக்கான சனி பெயர்ச்சி பொது பலன்கள்
மிதுன ராசி பொது பலன்களால், காய்கறி கடை, தோல் ஏற்றுமதி இறக்குமதி, புத்தக கடை, ஆன்மீக அருட்சாதனங்கள், இன்டீரியர், டெக்கரேட்டர்ஸ், கான்ட்ராக்டர்ஸ், ஆடை, தங்க நகை கடைகள் மற்றும் ஃபேன்சி ஸ்டோர் வைத்திருப்பவர்கள் நல்ல லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களை பொறுத்தவரை வரை ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி வந்து அமர்வதால் வேலையில் பிரச்சனைகள் ஏற்படலாம். தேவையில்லாமல் இஎம்ஐயில் கடன் வாங்க வேண்டாம். அலுவலகத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம்.
அதனால் அனாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். வேண்டுமெனவே முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். அதனால் பணிச்சுமை அதிகமாகும். ஒரு சில பணிகளை போராடி முடிக்க வேண்டி வரலாம். சூழ்நிலைகளை கவனமாக கையாளுங்கள். சிலருக்கு திடீர் இடமாற்றம் உண்டு.
மிதுன ராசிக்கான சனி பகவான் பார்வை பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்கு ஏழு 12 ஆம் இடங்களை பார்வை செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டை பார்ப்பதால் உடல் நலத்தில் எச்சரிக்கை தேவை. வீடு வாகனம் சம்பந்தமான சுபவிரயங்கள் ஏற்படலாம். தாய் வழியில் சொத்துப் பிரச்சனை வரலாம். மனதில் தேவையில்லாத கவலைகள் ஏற்பட்டு விலகும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை பார்ப்பதால் திருமணத்தில் தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் சிறு வாக்குவாதங்கள் வந்து போகும். கூட்டுத் தொழில் செய்வோர் கடன் வாங்கி தொழிலை விருத்தி செய்ய வேண்டாம்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுபவிரயங்கள் ஏற்படலாம். வேலை நிமித்தமாக கணவன் மனைவி பிரிந்து வாழ நேரலாம். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். சிலர் வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு தாய்நாடு திரும்புவீர்கள். உங்களுக்கு உண்டான பரிகாரங்கள் தேய்ப்பிறை சதுர்த்தசி திதியில் நரசிம்மரை வழிபடுங்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ