சனி பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

Sani Peyarchi News In Tamil: சிம்ம ராசி ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி 2025 எப்படி இருக்கும்? சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி காலகட்டம் பாதிப்பு தருமா? அல்லது பாதிப்பு தராதா? சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 9, 2025, 08:52 AM IST
சனி பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

Simmam Sani Peyarchi Palan 2025: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயற்சி எப்படி இருக்கும்? ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து பார்ப்போம். ஏனென்றால் சிம்ம ராசிக்காரர்கள் சனிப்பெயற்சி காலம் மற்றும் ராகு கேது காலம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒரு காலகட்டமாகும். 

Add Zee News as a Preferred Source

சனி பெயர்ச்சி 2025: சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்த சனி பகவான், இப்போது எட்டாம் வீட்டில் அஷ்டமத்து சனியாக வந்து அமர்வதால், நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. கடந்த மூன்று ஆண்டுகளாக கண்ட சனியால் பல கசப்பான அனுபவங்களை பெற்று இருப்பீர்கள். ஆனால் எல்லா சமயங்களிலும் கடவுள் உங்களுக்கு யார் மூலமாவது தக்க சமயத்தில் உதவிகள் செய்து காப்பாற்றி என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். ஆனால் திடீர் முடிவுகளையும் கோபம் சந்தேகம் பிடிவாத குணத்தையும் கட்டாயம் விட்டுவிட வேண்டும். விட்டுக்கொடுத்து போக வேண்டும். 

இந்த சனிப்பெயற்சி அஷ்டமத்து சனியாக வருவதால் நீங்கள் உண்டு உங்கள் வேலை என இருப்பது நல்லது. மேலும் குடும்ப விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது அவசியமாகும். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. உங்களுக்கு வரவேண்டிய பூர்வ பூர்வீக சொத்து பங்கை போராடி பெற வேண்டி வரலாம். 

சிம்ம ராசிக்கான நட்சத்திரத்திற்குரிய சனி பெயர்ச்சி பலன்கள்

சிம்ம ராசி மகம் நட்சத்திரம் நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. மற்றவர் பேச்சை கேட்டு அவசரப்பட்டு வேலையை விட்டுவிட வேண்டாம். தாய் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் வீடு, வண்டி, வாகன செலவுகள் ஏற்படலாம். தக்க சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை மாற்றம் உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாடகை வீட்டிலிருந்து சிலர் சொந்த வீட்டுக்கு குடி போகுவீர்கள். தொழில் செய்வோருக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும். அதே சமயம் கடன் பிரச்சனைகளால் அவமானங்களை சந்திக்க நேரலாம். 

சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் குடும்பத்தில் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். பிள்ளைகளின் உயர்கல்வி திருமணம் சம்பந்தமான கடமைகள் கவலைகளாக தலைதூக்கும் பணிச்சுமை அதிகமாகும். இனி அஷ்டமத்து சனி என்பதால் இரவு பகலாக வேலை செய்தாலும் கூட நல்ல பெயரை எடுப்பது கடினமாகும். 

சிம்ம ராசிக்கான சனி பெயர்ச்சி பொது பலன்கள்

சிம்ம ராசி பொது பலன்கள் மூலம் இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன கட்டிட உதிரி பாகங்கள் மற்றும் மூலதனம் போடாமல் தொழில் செய்வோருக்கு எல்லாம் நல்ல லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்சனைகளும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். சக ஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். இந்த சனிப்பெயற்சியால் பலவிதமான நெருக்கடிகள் வந்தாலும் துணிவே துணை என்ற அன்றாட பணிகளை கடமையாக ஏற்று செய்து வந்தால் அஷ்டமத்து சனியால் எந்த கஷ்டமும் வராது. 

சிம்ம ராசிக்கான சனி பகவான் பார்வை பலன்கள்

சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டு ஐந்து பத்தாம் இடங்களை பார்வை செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வரலாம். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதம் ஆகும். 

சனி பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால், தேவையில்லாத விஷயத்தை நினைத்து மனம் குழப்பமடையும். பூர்வீக சொத்தில் பிரச்சனைகள் வரலாம். 

சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தை பார்ப்பதால் தொழிலில் மந்தநிலை காணப்படும். கடன் வாங்கி தொழிலை விருத்தி செய்ய வேண்டாம். 

சிம்ம ராசிக்கான சனி பெயர்ச்சி பரிகாரங்கள்

இது உங்களுக்கு அஷ்டமத்து சனி என்பதால், சனிக்கிழமை அன்று சனி ஓரையில் திருக்கொள்ளிக்காடு ஈசனை வழிபட்டுவிட்டு சனி பகவானுக்கு எள் சாதம் படைத்து, எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, எட்டு பேருக்கு அன்னதானம் செய்து வழிபடுங்கள். நிச்சயம் அஷ்டமத்து சனியால் பாதிப்புகள் குறையும் என நம்பலாம்.

மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: கடக ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: மிதுன ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: ரிஷப ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News