Thulam Sani Peyarchi Palan 2025: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயற்சி எப்படி இருக்கும்? துலாம் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து பார்ப்போம்.
சனி பெயர்ச்சி 2025: துலாம்
துலாம் ராசிக்காரர்களே இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் வந்து அமர்வதால் ராஜ யோகத்தை அள்ளித் தர இருக்கிறார். நினைத்துக் கூட பார்க்க முடியாத வளர்ச்சியை வாரி வழங்க இருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சனி இருந்ததால் மனதளவில் பல கஷ்டங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். குடும்பத்தில் நடந்த சில நிகழ்வுகள் பெரும் கவலையை தந்திருக்கும். திடீரென வேலை போய் இருக்கலாம். பொருளாதார இழப்பால் வாடி வருந்தி செய்வதறியாது கோயில் கோயிலாக சுற்றி இருப்பீர்கள்.
அதற்கெல்லாம் பலன் பெறப்போகும் காலம்தான் இந்த சனிப்பெயற்சியாகும். இது உங்களுக்கு பொற்காலம். இனி உங்களின் வாழ்க்கை பாதையை சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
துலாம் ராசிக்கான நட்சத்திரத்திற்குரிய சனி பெயர்ச்சி பலன்கள்
துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் கோர்ட் கேஸ் பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நல்லபடியாக நடைபெறும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணி செய்யும் இடத்தில் உங்களை நம்பி மேலதிகாரி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.
துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் பூர்வீக சொத்து கைக்கு வரும் திடீர் பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் சிலருக்கு வேலை மாற்றம் சம்பள உயர்வுடன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குலதெய்வ வழிபாடு வெற்றியை தரும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வேலை இல்லாதவருக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். கூட்டுத் தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும்.
துலாம் ராசிக்குரிய சனி பெயர்ச்சி பொது பலன்கள்
துலாம் ராசி பொது பலன்கள் மூலம் வியாபாரிகளுக்கு அதீத லாபம் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீரும். கூட்டுத் தொழில் வளர்ச்சியை தரும் பங்குதாரர்கள் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் பணி செய்வோருக்கு இது பொற்காலம். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு புதிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வெளிநாட்டு வேலை அமையும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடி வரும். பெற்றோர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள்.
துலாம் ராசிக்கான சனி பகவான் பார்வை பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்று, எட்டு, 12 ஆம் இடங்களை பார்வை செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டை பார்ப்பதால் திடீர் வேலை மாற்றம் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம் இளைய சகோதரருடன் சொத்துப் பிரச்சனை ஏற்படலாம்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். ஹோட்டல் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டை பார்ப்பதால் எதிர்பாராத செலவுகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
துலாம் ராசிக்கான சனி பெயர்ச்சி பரிகாரங்கள்
உங்கள் ராசிக்கு உண்டான பரிகாரங்கள் எத்குவென்றால் புதன்கிழமை பெருமாள் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபடுங்கள். இதன் மூலம் வாழ்வில் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: கன்னி ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: கடக ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









