Meenam Rasi Sani Peyarchi Palankal 2025: மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இந்த சனி பெயர்ச்சி என்பது சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் ஓரளவு பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். மீன ராசிக்கான 2025 சனி பெயர்ச்சி பலன்கள் குறித்து பார்ப்போம்.
சனி பெயர்ச்சி 2025: மீனம்
மீன ராசிக்காரர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான், இப்போது உங்கள் ராசியில் ஜென்ம சனியாக அமர்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக விரையச் சனியாக பலவிதமான நெருக்கடிகளையும் எதிர்பாராத செலவுகளையும் தந்த சனி பகவான், தற்பொழுது உங்களுக்கு ஜென்ம சனியாக வருவதால் சில கஷ்டங்களை தருவார்.
ஆனால் அந்த கஷ்டங்கள் அனைத்தும் உங்களை அடுத்த கட்டத்திற்கு வாழ்வில் கொண்டு செல்லவே என்பது பொறுமையாகத்தான் புரியும். எந்த கஷ்டமும் வராமல் வெற்றியை பெற முடியாது என்பதால், இவை அனைத்தும் சோதனை அல்ல சாதனை என்பது புரியும்.
இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. கூட்டுத்தொழில் தொடங்க கூடாது. முக்கியமாக வேலையில் பிரச்சனை வந்தால் நீங்களாக வேலையை விடக்கூடாது. வண்டி வாகன பழுதை உடனுக்குடன் சரி பார்த்துக் கொள்வது நல்லது. வெளியில் எங்கு சென்றாலும் கையில் சஞ்சீவி ஆஞ்சநேயர் படத்தை வைத்துக் கொள்வது நல்லது. காலபைரவாஷ்டகம் மாலையில் தினமும் படிப்பது நல்லது. உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் மனம் அடிக்கடி கவலையில் சிக்கிக் கொள்ளும்.
அதனால் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள ராம நாமத்தையும் பிரதோஷ நாளில் நந்தியையும் சிவபெருமானையும் சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகரையும் தொடர்ந்து வழிபடும்போது சனிப்பெயற்சியால் எந்த பாதிப்பும் வராது என நம்பலாம். சனி பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் அனுபவத்தை தந்து அதன் மூலம் பக்குவத்தை ஏற்படுத்தி நல்வழிப்படுத்துவார்.
ஜென்ம சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி வரும். அதனால் அலைச்சல் இருக்கும்.
மீனம் ராசி நட்சத்திரத்திற்குரிய சனி பெயர்ச்சி பலன்கள் என்ன?
மீன ராசி பூரட்டாதி - நட்சத்திரம் அயல்நாடு செல்ல விசா காலதாமதமாக கிடைக்கும். நீண்ட நாள் குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். மகளுக்கு விரைவில் கல்யாணம் நடக்கும். வண்டி வாகன வகையில் தேவையில்லாத செலவுகள் வரலாம். மனதில் பலவிதமான தேவையில்லாத சிந்தனைகள் வந்து போகும். எதையும் பொறுமையாக செய்வது நல்லது. குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் - புது தொழில் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் அகல கால் வைக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் சிறு சண்டை சச்சரவு வரலாம். அதனால் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு வேலையில் பிரச்சனை வரலாம்.
மீன ராசி ரேவதி நட்சத்திரம் - மனதில் திடீரென தேவையில்லாத பயம் கவலை வந்து போகும். மகனின் கூடா நட்பு விலகும். புது வீட்டிற்கு சிலர் குடி போவீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உற்சாகத்தை தரும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.
மீன ராசிக்குரிய பொது பலன்கள் என்ன?
மீன ராசி பொது பலன் இல்லத்தரசிகளை பொறுத்தவரை சேமிப்பு கரையும், ஆயினும் வீட்டுக்கு தேவையானவற்றை வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை பணிச்சுமை குறையும். பதவி உயர்வு சம்பள கிடைக்கும். வியாபாரிகளைப் பொறுத்தவரை யாரிடமும் கடன் வாங்காமல் யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களைப் பொறுத்தவரை வேலையை விடும் அளவிற்கு நெருக்கடி இருக்கும். அதனால் சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும்.
ஐடியில் வேலை பார்ப்பவர்கள் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். ஹோட்டல், கணினி, உதிரி பாகங்கள், துணிக்கடை, விவசாயம், காய்கறி கடை, எலக்ட்ரானிக் கடை, பிளம்பர் தொழில், பேக்கரி தொழில் செய்வோருக்கு எல்லாம் இந்த சனி பெயர்ச்சியில் நல்ல லாபம் வரும்.
மீன ராசிக்காரர்கள் மீது சனி பகவான் பார்வை பலன்கள் என்ன?
சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்று, ஏழு, பத்தாம் இடங்களை பார்வை செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டை பார்ப்பதால் எந்த ஒரு செயலை முடிக்கவும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டி வரும். சிலருக்கு வெளியூரில் வேலை அமையும். இளைய சகோதரர் வகையில் செலவுகள் இருக்கும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை பார்ப்பதால் சொந்தக்காரர்களால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை வரலாம். தொழிலில் கடன் ஏற்படும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டை பார்ப்பதால் கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள் வரலாம், இதனால் மனக்கவலைகள் ஏற்படும். மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சியை பொறுத்தவரை சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் ஓரளவு பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
மீன ராசிக்கான சனி பெயர்ச்சி பரிகாரங்கள் என்ன?
தேய்ப்பிறை சனிக்கிழமையில், சனி ஓரையில் திருவாதவூர் சென்று சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி எட்டு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள். சனியின் பாதிப்புகள் குறையும்.
மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: கும்ப ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: தனுசு ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









