Dhanusu Rasi Sani Peyarchi Palan 2025: மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி வேலைமையையும் செலவுகளையும் தந்தாலும் உங்கள் முயற்சியால் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். தனுசு ராசி 2025 சனி பெயர்ச்சி பலன்கள் குறித்து பார்ப்போம்.
சனி பெயர்ச்சி 2025: தனுசு
தனுசு ராசிக்காரர்களே இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்து அமர்வதால் தொழிலில் அலைச்சல் இருக்கலாம். எதையும் யோசித்து செயல்படுவது நல்லது. சனி நான்கில் அமர்வதால் கடன் வாங்கி வீடு கட்டுவீர்கள் அதிகளவில் சுபவிரயங்கள் செய்வீர்கள். சிலர் சொந்த ஊரை விட்டுச் செல்ல நேரும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக பல விஷயங்களை சமாளித்து சாதனை படைத்து இருப்பீர்கள். ஆனால் தற்பொழுது அர்த்தாஷ்டம் சனி வருவதால் சின்ன சின்ன விஷயங்களையும் நுட்பமாக செய்வீர்கள். எந்த விஷயத்திலும் கூட்டு வேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவது கட்டுவது கொஞ்சம் இழுப்பறிய ஆக முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. சொத்து வாங்கினால் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். சமயத்தில் வில்லங்கம் வரலாம்.
தனுசு ராசிக்கான நட்சத்திரத்திற்குரிய சனி பெயர்ச்சி பலன்கள்
இனி உங்கள் நட்சத்திரத்திற்குரிய சனிப்பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம். தனுசு ராசி மூலம் நட்சத்திரம் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வரவும் செலவும் சமமாக இருக்கும்.
தனுசு ராசி பூரா நட்சத்திரம் மீடியாவில் வேலை பார்ப்பவர்களுக்கு இது பொற்காலம். மனைவி ஆரோக்கியம் நலமாகும். வீடு கட்டுவீர்கள். விழிப்புடன் செயல் புரிவீர்கள். தெய்வ அருளும் சித்தர்கள். ஆசீர்வாதமும் உண்டு. பிள்ளைகள் படிப்பில் சாதனை படைப்பார்கள். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை பிறரிடம் பகிர வேண்டாம்.
தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் அரசு அனுகூலம் உண்டாகும். சிறு தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் வரும். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். இல்லத்தரசிகளை பொறுத்தவரை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் ஆயினும் அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது.
தனுசு ராசிக்கான பொது பலன்கள்
தனுசு ராசி பொது பலன்கள் என்பது அலுவலகம் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை ஒர்க் பிரஷர் அதிகரிக்கும். கன்னிப் பெண்களைப் பொறுத்தவரை உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கல்யாணம் தடைப்பட்டு முடியும். மாணவ மாணவிகளுக்கு சவாலான காலகட்டம் இது. அதனால் விளையாட்டை குறைத்து படிப்பில் அக்கறை செலுத்துங்கள். அலட்சியப் போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
தொழில் புரிவோர் வட்டிக்கு கடன் வாங்கி கூட்டுத் தொழிலை விருத்தி அடைய செய்ய வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், நாட்டு மருந்து, மூலிகை வஸ்து, பழைய பேப்பர் கடை, கறிக்கடை, காலனிக் கடை, எழுத்துப் பணி மற்றும் வாயால் பேசி தொழில் செய்வோர், அதாவது பட்டிமன்ற பேச்சாளர்கள், சேல்ஸ்மேன், அர்ச்சகர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள், வக்கீல், ஜோதிடர்கள், ஆன்மீக குருமார்கள் அனைவருக்கும் இது நல்ல காலகட்டம்.
அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்தவும் சிலருக்கு வேலையில் நெருக்கடி இருந்தாலும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். கணினித் துறையினருக்கு புதிய சலுகைகள் கிடைக்கும்.
தனுசு ராசிக்கான சனி பகவான் பார்வை பலன்கள்
சனி பகவான் பார்வை பலன்கள் தனுசு ராசிக்கு எப்படி இருக்கிறது என்றால், சனி பகவான் உங்கள் ராசி மற்றும் ராசிக்கு ஆறு பத்தாம் இடங்களை பார்வை செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், அவ்வப்போது சோர்வு, கலைப்பு வந்து நீங்கும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை பார்ப்பதால் எதிரிகள் அனைவரும் உங்களை விட்டு விலகுவார்கள். கோர்ட், கேஸ் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். புது பொறுப்புகள் உங்களை நம்பித் தருவார்கள்.
மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி வேலைமையையும் செலவுகளையும் தந்தாலும் உங்கள் முயற்சியால் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வீர்கள் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்
தனுசு ராசிக்கான சனி பெயர்ச்சி பரிகாரங்கள்
தனுசு ராசிக்கு உண்டான பரிகாரங்கள் என்ன வென்றால், சனிக்கிழமை அன்று சனி ஓரையில் குச்சனூர் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும். திடீர் பணவரவு உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2025: விருச்சிகம் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2025: துலாம் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2025: கன்னி ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









