சனி பெயர்ச்சி 2025: விருச்சிகம் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

Sani Peyarchi 2025 News In Tamil: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி 2025 எப்படி இருக்கும்? விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி காலகட்டம் பாதிப்பு தருமா? தராதா? சனி பெயர்ச்சி 2025 பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 9, 2025, 10:12 AM IST
சனி பெயர்ச்சி 2025: விருச்சிகம் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

Viruchigam Rasi Sani Peyarchi Palan 2025: வாழ்க்கையில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள், சவால்கள், செயல்பாட்டு முன்னேற்றங்கள், நன்மைகள் மற்றும் பரிகாரங்களை தெரிந்து கொண்டு, உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிடுங்கள். விருச்சிகம் ராசி 2025 சனி பெயர்ச்சி பலன்கள் குறித்து பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

சனி பெயர்ச்சி 2025: விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்திருந்த சனி பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்வதால் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆயினும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் கடமைகளை எல்லாம் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக அத்தாஷ்டம சனியாக உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த சனி பகவான் பலவிதமான கஷ்டங்களை தந்திருப்பார். மிகக் கடினமான காலகட்டங்களை எல்லாம் தாண்டி வந்துவிட்டீர்கள். 

வீடு, வாகனம் வகையில் ஏற்பட்ட கடன் அனைத்தும் இந்த சனிப்பெயற்சியில் முடிவுக்கு வரும் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த அச்ச நிலை இனி இருக்காது. பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்வீர்கள். குழந்தை இல்லாதவருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அதே சமயம் பூர்வீக சொத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். சிலர் சொந்த ஊரை விட்டு செல்ல நேரலாம். தேவையில்லாத கவலையால் சமயத்தில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம், ஆலய வழிபாடு மூலம் சரி செய்து கொள்வீர்கள். 

விருச்சிக ராசிக்கான நட்சத்திரத்திற்குரிய சனி பெயர்ச்சி பலன்கள்

விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரம் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், சமாளித்து வெற்றி பெறுவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். நல்ல லாபம் வரும். வேலைப்பழு அதிகரிக்கும். அரசு அனுகூலம் உண்டாகும். 

விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் சிறு தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் வரும் தக்க சமயத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாத்தா, பாட்டி உடல் ஆரோக்கியம் சீராகும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இல்லத்தரசிகள் இது பொற்காலம். கணவர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். சிலர் புது வீட்டிற்கு தனிக்குடித்தனம் செல்வீர்கள். 

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் மூத்த சகோதரர் வகையில் லாபம் உண்டு கன்னிப் பெண்களைப் பொறுத்தவரை திருமணம் தாமதமாகும். பணி இடங்களில் சற்று பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மாணவர்கள் உயர்கல்வி படிக்க வெளியூர் செல்வீர்கள். 

விருச்சிகம் ராசிக்குரிய சனி பெயர்ச்சி பொது பலன்கள்

விருச்சிக ராசி பொது பலன்கள் வியாபாரிகளுக்கு இது சாதகமான சனி பெயர்ச்சியாகும். கூட்டுத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி, ஏஜென்சி ப்ரோக்கரேஜ் செய்வோர் அதிக லாபம் அடைவீர்கள். ஸ்பேர் பார்ட்ஸ் விற்பவர்கள், காபி ஷாப், ஹோட்டல், பேக்கரி, பூ வியாபாரம், ஆயில் ஸ்டோர், ஷேர் மார்க்கெட், அழகு சாதன கடை வைத்திருப்பவர்களுக்கு நல்ல லாபம் வரும். 

அலுவலகத்தில் வேலை செய்பவர்களைப் பொறுத்தவரை மேலதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். கொடுத்த வேலையை நல்லபடியாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். ஐடி மற்றும் மீடியாவில் வேலை பார்ப்பவர்களுக்கு யோகமான சனிப்பெயர்ச்சி இதுவாகும்.

விருச்சிகம் ராசிக்கான சனி பகவான் பார்வை பலன்கள்

சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டு, ஏழு, 11 ஆம் இடங்களை பார்வை செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டை பார்ப்பதால் கவனமாக பேசவும். விளையாட்டாக சொன்னது கூட சமயத்தில் வினையாகும். சில நேரங்களில் உங்களையும் அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். அதனால் நீண்ட நாள் நட்பையும் ஒரு நொடியில் இழக்க நேரலாம். இந்த காலகட்டத்தில் பண விஷயத்தில் பிறருக்காக ஜாமீன் கொடுக்க வேண்டாம். 

சனி பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை பார்ப்பதால் கணவன் மனைவி இருவரும் வேலை நிமித்தமாக பிரிந்து வாழ நேரலாம். தொழிலில் சில முடக்கங்கள் ஏற்பட்டு விலகும். 

சனி பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் திடீர் நஷ்டம் வரலாம். தக்க நேரத்தில் அரசு அதிகாரிகள் உதவுவார்கள். இழுப்பறியாக இருந்த வேலைகள் ஒரு வழியாக முடியும். கடனாக கொடுத்த பணம் வசூலாக கால தாமதமாகும். 

விருச்சிகம் ராசிக்கான சனி பெயர்ச்சி பரிகாரங்கள்

செவ்வாய்க்கிழமை வீட்டருகே இருக்கும் முருகன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நினைத்தது எல்லாம் நல்லபடியாக நடக்கும். 

மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: துலாம் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: கன்னி ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News