Rishabam Sani Peyarchi Palan 2025: இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இதுவரை நீங்கள் எதையெல்லாம் செய்தீர்களோ அதற்கான பலன்கள் கிடைக்கப் போகின்ற மாதமாக இந்த மாதம் இருக்கும். ரிஷபம் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து பார்ப்போம்.
சனி பெயர்ச்சி 2025: ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் அமர்ந்து, உத்தியோகத்தில் பிரச்சனைகளையும் புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனி பகவான், இப்போது லாப வீட்டில் அமர்வதால், இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனத்தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பதவி உயர்வும் மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும். புது சிந்தனைகள் வாழ்வை மாற்றும். எதிலும் ஆர்வம் பிறக்கும் மொத்தத்தில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.
ரிஷப ராசி நட்சத்திரத்திற்குரிய சனி பெயர்ச்சி பலன்கள்
ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சிலருக்கு வேலை மாற்றத்துடன் சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம். வரும் திடீர் பணவரவு உண்டாகும்.
ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.
ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். தந்தை சொத்து கைக்கு வரும். அரசாங்க அனுகூலம் உண்டாகும். மூத்த சகோதரரிடம் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்த பெரிய தொகை கைக்கு வரும்.
ரிஷப ராசிக்கான சனி பெயர்ச்சி பொது பலன்கள்
ரியல் எஸ்டேட் பதிப்பகம், எலக்ட்ரானிக் ஹார்ட்வேர் ஷாப் வைத்திருப்பவர்களுக்கு நல்ல லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார். ஐடியில் வேலை பார்ப்பவர்கள் பணி செய்யும் நிறுவனத்தில் இருந்து விலகி சம்பளம் அதிக கிடைக்கும் வேலைக்கு மாறுவீர்கள்.
ரிஷப ராசிக்கான சனி பகவான் பார்வை பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசி மற்றும் ராசிக்கு ஐந்து எட்டாம் இடங்களை பார்வை செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் சந்திராஷ்டம நாட்களில் டென்ஷன், கோபம், அலர்ஜி வரலாம். பணி செய்யும் இடத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் குறித்த அச்சம் வந்து நீங்கும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால், பிள்ளைகளின் போக்கில் சில மாற்றத்தை உணர்வீர்கள். அதனால் பிள்ளைகளிடம் சற்று அனுசரித்துச் செல்லவும். பிடிவாதம் பிடிக்க வேண்டாம். படிப்பு உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரலாம். சிலர் குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால், அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். பூர்வீக சொத்தில் பிரச்சனைகள் வரலாம். சிலர் திடீரென வேலை மாற்றலாகி வெளியூருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டி வரும். சமயத்தில் சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வரலாம். அதனால் எதையும் திட்டமிட்டு செய்யவும். உங்களுக்கு உண்டான பரிகாரங்கள் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதரை வழிபடுங்கள். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரும்.
மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: மேஷ ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









