Kanni Sani Peyarchi Palan 2025: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயற்சி எப்படி இருக்கும்? ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து பார்ப்போம். ஏனென்றால் சிம்ம ராசிக்காரர்கள் சனிப்பெயற்சி காலம் மற்றும் ராகு கேது காலம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒரு காலகட்டமாகும்.
சனி பெயர்ச்சி 2025: கன்னி
கன்னி ராசிக்காரர்களே இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்த சனி பகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்வதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சனி பகவான் ஆறில் இருந்தபோது பல எதிர்ப்புகளையும் சந்தித்து சாதித்து இருப்பீர்கள். ஆனால் இப்பொழுது சனி பகவான் ஏழில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யவும்.
கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகம் வியாபாரம் வேலை சம்பந்தமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டி வரலாம். விலை உயர்ந்த பொருட்கள் தங்க நகைகள் சிலருக்கு காணாமல் போகலாம். அதனால் கவனமாக இருப்பது நல்லது. திருமணம் சம்பந்தமாக எதிர்பார்த்திருந்த பெரிய தொகை கைக்கு வரத் தாமதமாகும்.
அரசாங்க அதிகாரிகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டமாக பெரிய பதவிகள் தேடி வரும். சிலருக்கு வீடு, வாகனம் சம்பந்தமான சுபவிரயங்கள் உண்டாகலாம். இந்த காலகட்டத்தில் கூட்டுத் தொழில் தொடங்க வேண்டாம்.
கன்னி ராசிக்கான நட்சத்திரத்திற்குரிய சனி பெயர்ச்சி பலன்கள்
கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் வட்டிக்கு பணம் வாங்கி தொழில் தொடங்க வேண்டாம். கஷ்டமான நேரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். எப்பொழுதும் இஷ்ட தெய்வ மந்திரத்தை மனதில் ஜெபம் செய்வது நல்லது.
கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் இந்த காலகட்டத்தில் குடும்பம் அலுவலகம் என ஒரே சமயத்தில் இரண்டையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். உடல் நலத்தில் கவனமாக இருத்தல் அவசியமாகும். மனதில் திடீரென தேவையில்லாத பயம் கவலை வரலாம்.
கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் வேலை செய்யும் இடத்தில் யாரையும் நம்பி எதுவும் பேச வேண்டாம். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பணத்தை சரியாக கையாள்வது அவசியமாகும்.
கன்னி ராசிக்குரிய பொது பலன்கள்
கன்னி ராசி பொது பலன்கள் காரணமாக சூப்பர் மார்க்கெட், செல்போன், டிவி, ரிப்பேர் கடைகள், மெக்கானிக், மருந்து கடைகள், புத்தகம் அச்சிடுவோர், மீடியா சம்பந்தமான தொழில் செய்வோர் அனைவருக்கும் இந்த சனிப்பெயிற்சி லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களைப் பொறுத்தவரை முன்பு போல் அடிக்கடி விடுப்பில் செல்லக்கூடாது. உயர் அதிகாரிகளிடம் முன்பு போல அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத இடத்துக்கு திடீரென மாற்றப்படலாம். ஒப்பந்த பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம். கோபத்தை தவிர்க்கவும். இது கண்டசனி காலம் என்பதால் பொறுமையுடன் சிந்தித்து செயலாற்றுங்கள்.
கன்னி ராசிக்கான சனி பகவான் பார்வை பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்கு, ஒன்பதாம் இடங்களை பார்வை செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் யோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். மிக முக்கியமாக இருக்கும் வேலையை விட்டுவிட்டு புது தொழில் தொடங்க வேண்டாம்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டை பார்ப்பதால் வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். சொந்தங்களின் உண்மையான முகம் தெரியவரும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டை பார்ப்பதால் பகட்டுக்காக வீண் செலவு செய்யாதீர்கள். குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குங்கள். குலதெய்வத்தை வழிபாடு செய்வதால் சுபகாரிய தடை நீங்கும்.
கன்னி ராசிக்கான சனி பெயர்ச்சி பரிகாரங்கள்
வள்ளநாடு சாது சிதம்பர சுவாமிகளை சித்திரை நட்சத்திரத்தில் சென்று தரிசித்து, எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். நிச்சயம் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: கடக ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
மேலும் படிக்க - சனி பெயர்ச்சி 2025: மிதுன ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









