சனி பெயர்ச்சி 2025: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்!

Sani Peyarchi 2025: நீதியின் கடவுளான சனி பகவான் நாளை மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இதனால் அதிக நன்மைகள் யாருக்கு? சனி பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 28, 2025, 01:44 PM IST
  • நீதியின் கடவுளான சனி பகவான் நாளை மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.
  • இதனால் அதிக நன்மைகள் யாருக்கு?
  • சனி பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.
சனி பெயர்ச்சி 2025: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்!

Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நாளை மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி பெயர்ச்சியின் தாக்கம் எந்த ராசிகளுக்கு அனுகூலமாக இருக்கும்? எந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் ஆரம்பம் ஆகும்? மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான பலன்களை இங்கே காணலாம்.

Add Zee News as a Preferred Source

1. மேஷம் (Aries):  சனி பெயர்ச்சி 2025 மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்வில் ஏற்றத்தை அளிக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். நீண்ட நாள் ஆசை ஒன்று இப்போது நிறைவேறும்.

2. ரிஷபம் (Taurus): ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி கலவையான பலன்களை அளிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பயணங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

3 மிதுனம் (Gemini): மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி 2025 அலுவலகப் பணிகளில் நல்ல பலனை அளிக்கும். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

4 கடகம் (Cancer): சனி பெயர்ச்சிக்கு பிறகான காலத்தில் சனி பகவானின் அருளால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அனைத்து பிரச்சினைகளையும் தைரியத்துடன் கையாண்டு வெற்றி காண்பீர்கள்.

5 சிம்மம் (Leo): சனி பெயர்ச்சி 2025 சிம்ம ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தியானம் போன்றவற்றில் மனதை செலுத்துவது நல்லது. பண வரவு இந்த காலத்தில் அதிகமாகும்.

6 கன்னி (Virgo): சனி பகவானின் அருளால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயமாகும். கணவன் மனைவியிடையே சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விட்டுக்கொடுத்து போவதும், பேச்சுவார்த்தை மூலமும் அனைத்து சண்டைகளையும் சரி செய்யலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

7 துலாம் (Libra): சனிப்பெயர்ச்சியின் தாக்கத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு எதிரிகளின் பயம் நீங்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

8 விருச்சிகம் (Scorpio): சனி பெயர்ச்சி 2025 விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அள்ளித் தரும். சொத்துக்களில் நீண்ட நாட்களாக இருந்து வந்த வில்லங்கம் நீங்கும். தடைபட்டிருந்த பல பணிகள் வெற்றிகரமாக நடந்து முடியும். வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.

9 தனுசு (Sagittarius): தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியின் தாக்கம் அனுகூலமான நன்மைகளை அளிக்கும். உறவுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வீடு வாகனம் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். எனினும் இந்த நேரத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாழ்வில் சௌகரியங்கள் குறைய வாய்ப்புள்ளது.

10. மகரம் (Capricorn): மகர ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். பேச்சாற்றல் மூலம் பல வெற்றிகளை காண்பீர்கள். உறவினர்கள் உடனான உறவு மேம்படும். இந்த காலத்தில் நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

11 கும்பம் (Aquarius): கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருளால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார நிலை மேம்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

12 மீனம் (Pisces): சனி பகவான் மீன ராசியில் தான் பெயர்ச்சியாக உள்ளார். சனி பெயர்ச்சி 2025 மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்வில் நிலைத்தன்மை ஏற்படும். நிதானமும் பொறுமையும் இந்த காலத்தில் மிக அவசியம். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நாளை சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி, பொற்காலம் ஆரம்பம்

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2025... கோடி நன்மைகளை பெறும் சில ராசிகளும்... சில பரிகாரங்களும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News