Sani Peyarchi 2025: நீதியின் கடவுளான சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருவதால், மிகவும் கடுமையான கிரகமாக கருதப்படுகிறார். சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றிக் கொள்வார். ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்கள் இருப்பதால், அவரது தாக்கமானது அதிகமாக இருக்கின்றது. அதேசமயம் அவர் எந்த ராசியில் இருந்தாலும், 12 ராசிக்கும் தாக்கம் இருக்கும். இந்த நிலையில், சனி பகவான் வரும் மார்ச் 29ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆக இருக்கிறார். இந்த மாற்றமனாது அனைத்து ராசிகளையும் பாதித்தாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இத்தொகுப்பில் காணலாம்.
துலாம் ராசி
துலாம் ராசியின் ஆறாம் வீட்டில் சனி பெயர்ச்சி நிகழ்வதால், இந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள். நிலுவையில் இருக்கும் பணிகள் நிறைவடைந்து புதிய உயரங்களை அடையலாம். பணியிடத்தில் உங்கள் பணிக்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஒதுக்கப்படலாம். உடல் நலம் தொடர்பான பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற வாய்ப்பு உள்ளது. இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதியை தரலாம். குடும்பத்தில் சொத்து அல்லது பிற தகராறுகள் தீர்க்கப்படலாம். போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் அதில், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
மேலும் படிங்க: சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் இவைதான்: வாழ்நாள் முழுதும் வெற்றி, ராஜயோகம்
ரிஷப ராசி
சனி பகவான் ரிஷப ராசியின் பதினொன்றாம் வீட்டில் இருப்பதால், அது செல்வத்தையும், வெற்றியையும் குறிக்கிறது. இதனால் நிதி ஆதாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சமூக தொடர்புகள் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உள்ள உறவுகள் முன்பை விட அதிகமாகலாம். உடல் நலத்தை பொறுத்தவரை பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் உணவு மற்றும் பானங்களில் கவனத்துடன் இருக்க வேண்டி உள்ளது.
கடக ராசி
சனி பகவான் கடக ராசியின் ஒன்பதாவது வீட்டில் இருப்பதால், நிறைய அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது. அந்த வகையில், பழைய பிரச்சனைகள் தீர்ந்து உயர்கல்வி பெறும் கனவு நினைவாகும். இந்த ராசிக்காரரகள் இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பது அவசியம். நிதானமாக இருந்து உழைப்பில் கவனம் செலுத்தினால், உங்களது துறையில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பெற்றோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். இது உங்கள் இலக்குகளை அடைய உதவும். திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. உடல் நலம் நன்றாக இருக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிங்க: புதாதித்ய ராஜயோகம்: கைக்கோர்க்கும் புதன் - சூரியன்; 3 ராசிகளின் வாழ்வு பிரகாசிக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









