சனி பெயர்ச்சி 2025: மகர ராசிக்கார்களுக்கு வாழ்க்கை சிறக்குமா, கசக்குமா? இதோ பலன்களும்-பரிகாரங்களும்..

Sani Peyarchi Rasi Palan 2025 Capricorn Magaram : மகரம் ராசிக்காரர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து முழுத் தகவல்கள்.

Written by - Yuvashree | Last Updated : Mar 12, 2025, 01:01 PM IST
  • சனிப்பெயர்ச்சி 2025 பலன்கள்..
  • மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள் என்ன?
  • லாபம் கிடைக்கும், பதவி உயர்வு வரும்..
சனி பெயர்ச்சி 2025: மகர ராசிக்கார்களுக்கு வாழ்க்கை சிறக்குமா, கசக்குமா? இதோ பலன்களும்-பரிகாரங்களும்..

Sani Peyarchi Rasi Palan 2025 Capricorn Magaram : Sani Peyarchi 2025 News In Tamil: மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி 2025 எப்படி இருக்கும்? மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி காலகட்டம் பாதிப்பு தருமா? நல்லது நடக்குமா? சனி பெயர்ச்சி 2025 பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.  மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி வேலைமையையும் செலவுகளையும் தந்தாலும் உங்கள் முயற்சியால் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். மகரம் ராசி 2025 சனி பெயர்ச்சி பலன்கள் குறித்து பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

Magaram Rasi Sani Peyarchi Palan 202 | சனி பெயர்ச்சி 2025:

மகர ராசிக்காரர்களே ஏறக்குறைய எட்டரை ஆண்டுகளாக உங்களை ஆட்டிப் படைத்த சனி பகவான், இப்போது உங்களை விட்டு விலகி உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் இனி வெற்றிதான். மனதளவில் விலகி இருந்த கணவன் மனைவி கூட இனி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வீர்கள். சிலர் குடும்பத்துடன் வட மாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். 

பணம், பேர், புகழ் அனைத்தும் உங்கள் சுய முயற்சியால் அடைவீர்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். யோகம், தியானம், ஞானம் என்று மனதை இறை சக்தியால் பக்குவப்படுத்திக் கொள்வீர்கள். இதுவரை தடைப்பட்ட சுபகாரியங்கள் இனி நல்லபடியாக நடக்கும். மகரம் ராசி நட்சத்திரத்திற்குரிய சனி பெயர்ச்சி பலன்கள் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் சொந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். அடமானம் வைத்த தங்க நகைகளை மீட்பீர்கள். சமுதாயத்தில் மேலான நிலையை அடைவீர்கள். பழைய வீட்டை அகற்றிவிட்டு புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். 

எல்லோரும் ஆச்சரியப்படும்படி வாழ்வீர்கள். மகர ராசி திருவோணம் நட்சத்திரம் தொழிலில் நல்ல லாபம் வரும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு ஏற்படும். புது செல்போன் மற்றும் வீட்டுக்கு தேவையானவற்றை எல்லாம் வாங்குவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இது உங்களுக்கு அற்புதமான காலகட்டம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். 

பதவி உயர்வு, லாபம், நட்பு..

உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் புது தொழில் தொடங்குவீர்கள். நல்ல லாபம் வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களை எதிரியாக நினைத்த பலரும் இனி நட்பு பாராட்டுவார்கள். ஷேர் மூலம் லாபம் வரும். பெரிய பதவிகள் தேடி வரும். இல்லத்தரசிகளுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவரின் வியாபாரத்தை முன்னின்று நடத்துவீர்கள். தங்க நகைகள் வெள்ளி பாத்திரங்கள் வாங்குவீர்கள். மகரம் ராசி ராசிக்குரிய பொது பலன்கள் மகர ராசி பொது பலன்கள் காரணமாக அலுவலகம் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை உங்களின் திறமையை குறைவாக எடை போட்டவர்கள் வியக்கும் படி கடினமான பணிகளை செய்து முடிப்பீர்கள்.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2025... ஏழரை நாட்டுச் சனியில் சிக்கும் ராசிகளும்... சில எளிய பரிகாரங்களும்

சம்பளம் உயரும். கன்னிப் பெண்களைப் பொறுத்தவரை தடைப்பட்ட கல்வியை தொடர்வீர்கள். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். வெளிநாட்டில் வேலை உயர்கல்வி அமையும். தொழில் செய்வோர்கள் கடையை நவீனமயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றி அனுபவம் மிகுந்த புது வேலையாட்களை சேர்ப்பீர்கள். சினிமா, பதிப்புத் துறை, ஹோட்டல், கிரானைட் டைல்ஸ், மரத்தொழில், விவசாயம், ஆசாரி, ஆசிரியர், மருந்து விற்பனையாளர்கள், சிறுதொழில் புரிவோர் அனைவருக்கும் நல்ல லாபமான சனிப்பெயர்ச்சி இது. அலுவலகத்தில் பணி செய்வோரை பொறுத்தவரை பிரச்சனை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைப்பட்ட பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உறுதியாகும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். எதிர்ப்புகள் நீங்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். 

கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பலு அதிகமானாலும், அதற்கு தகுந்த சம்பள உயர்வும் கிடைக்கும். மகரம் ராசிக்கான சனி பகவான் பார்வை பலன்கள் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஐந்து, ஒன்பது மற்றும் 12 ஆம் இடங்களை பார்வை செய்கிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்தை விற்பீர்கள். பிள்ளைகளின் உயர் படிப்பு மற்றும் பிள்ளைகளின் திருமணத்திற்காக சுபவிரையம் செய்வீர்கள். 

சனி பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தை பார்ப்பதால், தந்தை உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அனாவசிய செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டை பார்ப்பதால் சரியான உறக்கம் இருக்காது. ஓய்வு எடுக்க முடியாது. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். மகரம் ராசிக்கான சனி பெயர்ச்சி பரிகாரங்கள் மகரம் ராசிக்கு உண்டான பரிகாரங்கள் எதுவென்றால், பௌர்ணமி முழு நிலவு நாளில், மலைமேல் இருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று நெய் விளக்கேற்றி வழிபடவும். அனைத்தும் நன்மையாகும்.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2025: இந்த ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பம்... அஞ்ச வேண்டாம்; பரிகாரங்கள் இருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News