வருகிற ஜூலை 06 ஆம் தேதி, சுக்கிரனும் சனியும் லாபத் திருஷ்டி யோகத்தை உருவாக்குவார்கள். இந்த யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கு மிகுந்த பயன் உண்டாகும். எனவே அவை எந்த ராசிகள் என்பதை அறிந்து கொள்வோம்.

Sani Peyarchi Sukran Peyarchi: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது அதன் இயக்கத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் கிரகங்களின் இயக்க மாற்றத்தால் சிறப்பு மற்றும் நன்மை பயக்கும் யோகத்தை உருவாகிறது. அந்த வகையில் ஜோதிடத்தின் படி, வருகிற ஜூலை 06 ஆம் தேதி, சுக்கிரனும் சனியும் லாபத் திருஷ்டி யோகத்தை உருவாக்குவார்கள். இந்த யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கு மிகுந்த பயன் உண்டாகும். எனவே அவை எந்த ராசிகள் என்பதை அறிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில், நீதி மற்றும் தண்டனையின் கடவுளான சனியின் பங்கும், அசுரர்களின் குருவான சுக்கிரனின் பங்கும் மிக முக்கியமானது. சனி கிரகங்கள் அனைத்திலும் மிக மெதுவான கிரகம், இது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர சுமார் 2.5 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும், எனவே சனி மீண்டும் அதே ராசிக்கு வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். மறுபுறம் சுக்கிரன் செல்வம், செழிப்பு, மகத்துவம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது, இது ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கிறது. thar
தற்போது, சனி மீனத்திலும், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தின் காரணியான சுக்கிரன் மேஷத்திலும் பயணித்து வருகிறார், அத்தகைய சூழ்நிலையில், தற்போது ஜூலை 06 ஆம் தேதி, சுக்கிரனும் சனியும் லாபத் திருஷ்டி யோகத்தை உருவாக்கப் போகிறது. இதனால் எந்த ராசிக்காரர்கள் பலன் பெறப் போகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ரிஷபம் (Taurus Zodiac Sign): சனி மற்றும் சுக்கிரன் இருவரும் ரிஷப ராசிக்கு காரணமான கிரகமாகும். இதுபோன்ற சூழ்நிலையில், ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரன்-சனி லாப திருஷ்டி யோகத்தால் சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில், ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி பலம், சொத்து நன்மைகள் மற்றும் வேலையில் ஸ்திரத்தன்மையை அளிக்கும். திருமணமானவர்களுக்கும் இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்.
கடகம் (Cancer Zodiac Sign): சனி மற்றும் சுக்கிரனின் இணைந்த பார்வையால், பழைய நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும் வாய்ப்பு, பண ஆதாயம் மற்றும் மன அமைதி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சமநிலையும் அதிகரிக்கும், மேலும் முதலீட்டிலிருந்து லாபமும் கிடைக்கும்.
துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசி சுக்கிரனின் ராசியாகும், மேலும் இது சனியின் நட்பு ராசியாகவும் கருதப்படுகிறது. எனவே, சுக்கிரன்-சனி திருஷ்டி யோகத்தின் பலன்களால் வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும். இந்த நேரத்தில், இன்பங்களும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். புதிய கார் அல்லது வீடு வாங்க வாய்ப்பு உள்ளது. சுக்கிரன்-சனியின் அருளால் சமூக கௌரவம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளிலும் நிவாரணம் கிடைக்கும்.
மகரம் (Capricorn Zodiac Sign): சனி தனது சொந்த ராசியில் பயணித்து வருவதால், மகர ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். அழகு, கலை, இசை அல்லது ஃபேஷன் துறையினருக்கு சுக்கிரனின் பார்வை நன்மை பயக்கும். வேலையில் பதவி உயர்வு மற்றும் வருமான அதிகரிப்பு சாத்தியமாகும்.
மீனம் (Pisces Zodiac Sign): மீன ராசியில் சனியின் மூன்றாவது பார்வையும், சுக்கிரனின் ஏழாம் பார்வையும் மீன ராசியில் விழுகின்றன. இதனால் வணிக விரிவாக்கம், வெளிநாட்டு பயணம் மற்றும் உறவுகளில் ஸ்திரத்தன்மை ஏற்படும். படைப்புத் துறைகளில் உள்ளவர்களுக்கு சிறப்பு நன்மைகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ