)
Saturn Sun Powerful Rajyog : ஜோதிடத்தின் படி, கடந்த ஏப்ரல் 14 அன்று, சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இந்தப் பெயர்ச்சிக்குப் பிறகு, சனி மற்றும் சூரியன் ஆகிய இரண்டு கிரங்களும் ஒன்றுக்கொன்று 30 டிகிரி கோணத்தில் வந்துள்ளன. இதன் மூலம் சூர்யா மற்றும் சனி துவாதசாம்சம் ராஜயோகத்தை உருவாகுகிறது. சூரியன் மற்றும் சனியின் இந்த அரிய ராஜயோகம் மே 15 வரை இருக்கும். இதனால் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். இந்நிலையில் சூரியன் மற்றும் சனியின் இந்த ராஜயோகத்தால் எந்த மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்புப் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.
மிதுனம் (Gemini Zodiac Sign): சனி மற்றும் சூரியனால் உருவாகி இருக்கும் இந்த அரிய ராஜயோகத்தால் செல்வக்கு மற்றும் செழிப்பு அதிகரிக்கும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக மேம்படும். வருமான வளர்ச்சி ஏற்படும். பல புதிய ஆதாரங்கள் ஏற்படும். தொழிலில் மிகப்பெரிய லாபத்தை ஈடலாம். முதலீடு மூலம் பல பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஆரோக்கியம் மேம்படும்.
கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்கள் சனி மற்றும் சூரியனின் சக்திவாய்ந்த அரிதான ராஜயோகத்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைவார்கள். சம்பளம் அதிகரிக்கக்கூடும். மேலும் பதவி உயர்வையும் பெறலாம். இந்த காலகட்டத்தில், மூதாதையர் சொத்துக்களால் நன்மைகள் உண்டாகும். வணிக ரீதியாக வெளியூர் பயணம் செல்லலாம். இதனால் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படலாம். சூரியன் மற்றும் சனி பகவானிடமிருந்து சிறப்பு ஆசீர்களை பெறலாம். தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கையில் புதிய உயரங்களைத் தொடலாம். நிதி ஆதாயம் உண்டாகும். இதனால் வங்கி இருப்பு மளமளவென அதிகரிக்கும்.
கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகளை பெறலாம். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாமியார் வீட்டாரின் மூலம் நிதி நன்மைகள் உண்டாகும். இது தவிர, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை நீங்கள் பெறலாம். நிலம் வாங்கலாம். மிகப்பெரிய நிதி ஆதாயம் உண்டாகும். இந்த காலகட்டத்தில், வணிக முதலீடு நன்மைகளைத் தரும். மன அழுத்தம் நீங்கலாம். சுப செலவுகள் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ