சனி வக்கிர பெயர்ச்சி: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை தரும் சனி பகவான் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி அன்று மீனத்தில் வக்ர நிலையை அடைவார். 2025 நவம்பர் மாதம் 28ஆம் தேதி வரை வக்கிர நிலையில் நீடிப்பார். பொதுவாக ஒரு கிரகம் வக்கிர நிலையை அடையும் போது, அதன் வீரியம் அதிகமாக இருக்கும் என்றும், அதனால் கிடைக்கும் நற் பலன்கள் மற்றும் கெடு பலன்கள் இரண்டுமே, அதிகபட்ச அளவில் இருக்கும் என்றும் ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்
சனீஸ்வரன் வக்கிர நிலையை அடைவதால், குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள், எல்லா வகையிலும் பலன் பெறுவார்கள் என்றும், பணவரவு, மகிழ்ச்சி, செல்வம் என எதற்கும் குறைவிருக்காது என்றும் ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். இவர்கள் கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றிதான். வாழ்க்கையில் மிகவும் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு செல்ல, சனீஸ்வரன் துணை புரிவார்.
கடக ராசிக்கான சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்
கடக ராசியினருக்கு வருமானம் உயர்ந்து, பொருளாதார நிலை மேம்படும் வாய்ப்பு உண்டு.. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான அனைத்து பொன்னான வாய்ப்புகளும், இவர்களைத் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கும், அவர்களுக்கு பிடித்த வகையில் நல்ல வேலை கிடைக்கும். இவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், நல்ல பலன்களை கொடுப்பதாக இருக்கும். நிலுவையில் இருக்கும் வேலைகள் அனைத்தும், மிக வேகமாக நிறைவேறி, எதிர்பார்த்த முடிவுகளை கொடுக்கும்.
மகர ராசிக்கான சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்
மகர ராசியினருக்கு சனீஸ்வரன் அருளால் நினைத்தெல்லாம் நிறைவேறும். விரும்பியதை அடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், வேலையில் அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெறுவார்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன. நாள்பட்ட நோய்களிலிருந்து விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்குவீர்கள். மன அழுத்தம் நீங்கும். முதலீட்டு வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டால், பணத்தை பன் மடங்காக பெருக்கலாம்.
கும்ப ராசிக்கான சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்
கும்ப ராசியினருக்கு தற்போது பாத சனி காலம் தொடங்கியுள்ளது. எனினும் சனியின் அருளால் தடைகள் அனைத்தையும் சிறப்பாக வெற்றி கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வருமான ஆதாரம் பெருகும். பண ஆதாயங்கள் சிறப்பாக இருக்கும். மன விருப்பங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ள பதற்றம் முடிவுக்கு வரும். தற்போது எடுக்கும் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனை கொடுக்கும். எனவே உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும்.
சனி வக்ர பெயர்ச்சியின் நற்பலன்களை அதிகரிக்க உதவும் சில பரிகாரங்கள்
சனீஸ்வரன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்க, சனிக்கிழமைகளில், நவகிரகங்களை வணங்குவதுடன், சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. உங்களால் முடிந்த அளவு ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பது, சனீஸ்வரன் மனதை குளிர்விக்கும். கருணை உள்ளம் கொண்டவர்களையும், கடின உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்களையும், சனிபகவான் கைவிடுவதில்லை.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: மகாராஜ வாழ்க்கை, அதிர்ஷ்ட பொற்காலம், பண வெற்றி இந்த ராசிகளுக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ