)
சனி வக்ர பெயர்ச்சி 2025: சனி வக்ர நிலையில் மீன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த ஆண்டு, மார்ச் 29 அன்று சனி மீன ராசியில் பெயர்ச்சியான நிலையில் ஜூலை 13 முதல் சனி வக்ர நிலைக்கு செல்வார். நவம்பர் 28 வரை வக்ர இயக்கத்திலேயே இருப்பார். ஜோதிடத்தில் சனி கர்ம காரகர் என்று விவரிக்கப்படுகிறது. கிரகங்களின் வக்ர நிலையில் கெடு பலன் கள், நற்பலனங்கள் இரண்டுமே அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், சனி மீன ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிக்கும் போது மேஷம், மிதுனம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும் .
சனி பகவான் ஜூலை 13ம் தேதி மீன ராசியில் சனி வக்ர நிலையை அடைந்து 139 நாட்கள் வரை வக்ர நிலையில் நீடித்த பிறகு, நவம்பர் 28 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைவார். சனி வக்ரமாக இருப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்
ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலகட்டம், சிறிது சோதனையான கால கட்டமாக இருக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. அலுவலகப் பணியில் இருப்பவர்கள், வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் சிக்கல்கள் ஏற்படலாம். நிதிநிலை சிறப்பாக இருக்காது. கடன் வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம்.
மிதுன ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்
பேச்சில் கவனம் தேவை. வீடு அலுவலகம் இரண்டிலுமே வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதால் பலவிதமான சிக்கல்களை தவிர்க்கலாம். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காமல் மன அழுத்தம் ஏற்படலாம். எனினும் உங்கள் முயற்சி வீணாகாது என்பதை நினைவில் கொள்ளவும். பணி சுமை அதிகம் இருக்கும். குடும்ப உறவுகள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவக்கூடும்.
கன்னி ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்
சனி பகவான் பெருத்த சோதனைகளை கொடுப்பார். நிதிநிலை பாதிக்கப்படும். பண விஷயங்களில் பல போராட்டங்களை சந்திக்க நேரிடும். வருமானமும் குறையலாம். எனினும் நிலைமையை சாதுரியத்துடன் கையாண்டால் பிரச்சனைகளை ஓரளவு சமாளிக்கலாம். குடும்ப வாழ்க்கையிலும் குழப்பங்கள் மன அமைதியை கெடுக்கும் வகையில் இருக்கும்.
துலாம் ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்
உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்திக்கும் காலகட்டம் இது. பணியிடத்தில் பணி சுமை காரணமாக உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் இரண்டும் பாதிக்கப்படும். சொத்து தகராறுகள் மனதிற்கு சஞ்சலத்தை கொடுக்கலாம். வாக்குவாதங்களையும் சர்ச்சைகளையும் தவிர்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக நிம்மதி இல்லாத சூழ்நிலை ஏற்படும்.
தனுசு ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதன் காரணமாக, மருத்துவ அதிகரிக்கலாம். நிதி நிலைமையும் கை கொடுக்காமல் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். அலுவலகத்திலும் நெருக்கடியான நிலையை சந்திக்க கூடும். எனினும் நடப்பவை நல்லவைக்கே என்றும், எதிர் காலத்தில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து, நிம்மதியான வாழ்க்கை வாழ வாய்ப்பு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ