Saturn Natchathira Transit 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி இரண்டும் மிகவும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், இந்த முறை சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக இருக்கப் போகிறது. இந்நிலையில் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழையப் போகிறது. இந்த முக்கியமான மாற்றம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி, 2025 அன்று காலை 7:52 மணிக்கு நடைபெறும்.
பொதுவாக சனி நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருபவர் ஆவார். இதனால் தான் சனியை நாம் நீதியின் கடவுளாக பார்கிறோம். சனி தனது சொந்த ராசி அல்லது நட்சத்திரதிற்குள் வரும்போது, அதன் தாக்கம் ஆழமாக தெரியும். இது சில ராசிக்காரர்களுக்கு, வெற்றி, பண மழை, நிதி ஆதாயத்தை தரும். இந்தப் பெயர்ச்சியால் பெரும் பலன்களைப் பெறக்கூடிய அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி ஏன் சிறப்பு வாய்ந்தது?
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பெயர்ச்சி அடைவது அரிய நிகழ்வாகும். இந்த மாற்றம் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளிலும் காணப்படும்.
எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்?
ரிஷபம்: சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன் கிடைக்கும். இந்த ராசியின் பதினொன்றாவது வீட்டில் சனி அமர்ந்திருப்பார், இது வருமானம் மற்றும் லாப வீடாக்கும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். மூத்த அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பாராட்டுகளை பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் விரைவில் முடியும். நிதி நிலைமை வலுவடையும், வருமான அதிகரிக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்தப் பெயர்ச்சி பத்தாவது வீட்டில் நடக்கம். இது தொழில் மற்றும் வேலை வீடாகும். இதனால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் பெயர்ச்சி நன்மைகளைத் தரும். தொழிலில் பெரிய மாற்றம் ஏற்படும். வெளிநாட்டு பயணம் செல்லலாம். வேலைவாய்ப்பு கிடைக்கலாம். சொத்து மற்றும் வாகனம் வாங்கலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி பலன்கள்: துன்பங்களைத் தாண்டி இனி நன்மைகள் மட்டுமே வரும் 5 ராசிகள்!
மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், வெற்றி மழையில் நனைவார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ