15 நாட்களுக்குள் 2 முறை பெயரும் சனீஸ்வரரால் கொள்ளை பணம் சம்பாதிக்கப் போகும் ராசிகள்
Shani Gochar Twice In 15 Days: சனிப் பெயர்ச்சியால், 3 ராசிக்காரர்கள் சுப பலன்களை அனுபவிப்பார்கள். அவர்கள் தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும் என்பதால், பொங்கல் பண்டிகை அவர்களுக்கு கரும்பாக இனிக்கும்
நியூடெல்லி: புத்தாண்டு நல்லதாக பூத்திருக்கும் இந்த சமயத்தில், பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளும் நடந்துக் கொண்டேயிருக்கின்றன. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நவகிரகங்களில் சனியின் நிலையில் மிக முக்கியமான மாற்றங்கள் நிகழப் போகின்றன. ஜனவரி 17ம் தேதியன்று சனிப் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான், தனது ராசியை மாற்றி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைவார்.
ஜனவரி 17ம் தேதி தனது ராசியை மாற்றும் சனி, பிறகு அஸ்தமிக்கிறார். இந்த இரு நிகழ்வுகளின் ஒட்டுமொத்த பலனாக 3 ராசிக்காரர்கள் சுப பலன்களை அனுபவிப்பார்கள். அவர்கள் தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும் என்பதால், பொங்கல் பண்டிகை அவர்களுக்கு கரும்பாக இனிக்கும்.
மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்! இனி ‘இந்த’ ராசிகள் தொட்டதெல்லாம் வெற்றி தான்!
15 நாட்களுக்குள் 2 முறை சனியின் நிலை மாற்றம்
15 நாட்களுக்குள் 2 முறை சனியின் நிலை மாறினால், இவர்களுக்கு லாட்டரி அடிக்கும்! பணக்காரர் ஆகிவிடுவார்கள் என்று சொல்லலாம். சனி கும்ப ராசியில் நுழைந்தவுடன் ஏழரை நாட்டான் என்று அழைக்கப்படும் சனீஸ்வரரின் பிடியில் இருந்து ராசிகளில் சில விலகுவதும், சில ராசிகளுக்கு சனியின் ஏழரை ஆண்டு கால பீடித்தலும் தொடங்கும்.
இது மட்டுமின்றி, இதற்குப் பிறகு 2023 ஜனவரி 30-ம் தேதி சனி மறைவார். மார்ச் 6, 2023 வரை அதே நிலையில் இருக்கும் சனி பகவான், மீண்டும் நிலை மாறுவார். 15 நாட்களில் 2 முறை சனியின் நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மறுபுறம், 3 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
மேலும் படிக்க | தைப் பொங்கல் மாதத்தில் 8 பெயர்ச்சிகளில் பணம் கொடுக்குமா சனி பெயர்ச்சி?
இந்த ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சி மற்றும் சனியின் அஸ்தமனத்தால் பலன் அடைவார்கள்
ரிஷபம்: 2023 ஜனவரியில் சனியின் சஞ்சாரம் மற்றும் அதன் பிறகு சனியின் அஸ்தமனம் என்பது ரிஷப ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும். இவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். தடைகள் நீங்கும். வெற்றியின் உச்சத்தை தொடும் வாய்ப்பு கிடைக்கும். செல்வாக்கும் மரியாதையும் அதிகரிக்கும். வருமானம் கூடும்.
துலாம்: சனியின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இவர்களும் சனியின் பாதகமான பார்வையில் இருந்து விடுதலை பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவார்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரமும், சனியின் அஸ்தமனமும் அனுகூலமாக இருக்கும். கல்வி மற்றும் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு பெறலாம். வியாபாரம் வளரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
மகரம்: மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறும் சனீஸ்வரர், பிறகு கும்பத்தில் அஸ்தமிகப்பார். இதனால் மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இவர்களின் தடைபட்ட பணிகள் வேகமாக நடக்கத் தொடங்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நெருங்கும் சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், ஜாக்கிரதை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ