செவ்வாய் பெயர்ச்சி 2025: மன உறுதி, மன தைரியம், வீரம் ஆகியவற்றை வழங்கும் காரணியாக செவ்வாய் கருதப்படுகிறது. சனி பகவான், குரு பகவான் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகளை போலவே, செவ்வாய் பெயர்ச்சியும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

செவ்வாய் பெயர்ச்சி 2025:ஜூன் மாத கிரக பெயர்ச்சிகள் செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியுடன் முடிவடைகிறது. கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் தற்போது மக நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில் வரும் ஜூன் 30ம் தேதி திங்கட்கிழமை பூர நட்சத்திரத்திற்கு செல்வார். செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.ஜூன் மாதம் முதல் வாரத்தில் செவ்வாய், சூரியனின் ராசியான சிம்ம ராசிக்கு சென்ற நிலையில் வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி வரை செவ்வாய் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாயின் அருளால் தடைபட்ட பணிகள் அனைத்தும் தொடங்கி, வாழ்க்கையில் தாங்கள் விரும்பிய அனைத்தையும் அடைவார்கள், நினைத்தது நடக்கும், தொட்டது துலங்கும் என ஜோதிட கணிப்பு கூறுகிறது. செவ்வாயின் அருளை பரிபூரணமாகப் பெறும் அந்த 5 அதிர்ஷ்டசாலிகள் யார் என்பதை இந்த பதிவை அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி, அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும். மன விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் முழுமையான மனதுடன் ஒத்துழைப்பை வழங்குவார்கள். வீட்டிலும் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு, குடும்ப உறுப்பினர்கள் தங்கள் முழு ஆதரவை வழங்குவார்கள். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உறவுகள் மத்தியில் நல்லிணக்கமும் இன்மையும் இருக்கும்.
சிம்ம ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும். வேலையில் தொழிலில் பெரும் முன்னேற்றத்தை பார்க்கலாம். வாழ்க்கையில் சந்தோஷத்திற்கும் மன அமைதிக்கும் குறைவிருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும். எனினும் பெரிதாக கவலைப்பட ஒன்றுமில்லை. நிதி நிலைமையும் திருப்திகரமாக இருக்கும்.
கன்னி ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு, மிகவும் சாதகமான பலன்களை கொடுக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். மனதிற்கு பிடித்த வகையில் ஆடம்பரத்திற்கும் பொழுது போக்கிற்கும் பணத்தை செலவழித்து சந்தோஷமாக இருப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கம் இருக்கும். உத்தியோகஸ்தர்களும் பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
மகர ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
செவ்வாயின் அருளால் மகர ராசியினருக்கு பண வரவுக்கு குறைவிருக்காது. முதலீட்டில் இருந்து எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மீன ராசிக்கான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்
செவ்வாயின் நட்சத்திர பயிற்சி, வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வருமானம் பெருகும். அலுவலக வேலைகள் இருப்பவர்களுக்கு கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் பாராட்டும் தேடி வரும். நிதி நிலை உயரும். குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ