ஜோதிடத்தில் செவ்வாய்க்கு தளபதி அந்தஸ்து உண்டு. தைரியம், வலிமை, போர் குணம், கோபம், ஆற்றல் போன்றவற்றைப் வழங்கும் காரகர் செவ்வாய். ஜாதகத்தில் செவ்வாயின் நிலை மற்றும் அம்சம் ஒரு நபரின் உடல் மற்றும் மன நிலையை பாதிக்கிறது. செவ்வாய் மகர ராசியில் உச்சமாகவும், கடகத்தில் நீச்சமாகவும் இருக்கிறார். 2025 ஜனவரி 21ம் தேதி அன்று மதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சியானார்.
செவ்வாய் பெயர்ச்சி
தற்போது மிதுனத்தில் உள்ள செவ்வாய், வரும் 2025 ஏப்ரல் 3ம் தேதி, வியாழன் அதிகாலை 1:56 மணிக்கு கடகத்தில் நுழைந்து நீச்சமடைவார். செவ்வாய் கிரகம் 65 நாட்களுக்கு நீச்சமடைந்திருப்பார். பின்னர் 2025 ஜூன் 7ல் சிம்ம ராசியில் பிரவேசிப்பார். செவ்வாய் கடகத்தில் வலுவிழந்து இருப்பது அனைத்து ராசிகளிலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் இந்த ஜோதிட நிகழ்வு 5 ராசிகளின் தலை எழுத்தையே மாற்றும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சி கலவையான பலன்களை தரலாம். இது உங்கள் குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இருப்பினும், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் நீங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த நேரம் சற்று குழப்பமாக இருக்கும். குடும்ப விவகாரங்களில் முன்னேற்றம் காணப்படும். வீட்டில் அமைதி நிலவும். பழைய உறவுகள் மேம்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சஞ்சாரம் பணியிடத்தில் சாதகமான பலன்களைத் தரும். உங்கள் பணி வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும். வேலை, தொழிலில் முன்னேற்றத்திற்கான நேரமாக இருக்கலாம். நீங்கள் ஒரு புதிய திட்டத்தில் பணிபுரிந்தால், நீங்கள் வெற்றி பெறலாம். சக ஊழியர்களுடன் சிறப்பாக பணியாற்றவும், உங்கள் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்தவும் இது ஒரு நேரம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு செவ்வாய் சஞ்சாரம் மிகவும் சாதகமாகும். இந்த நேரம் பயணம், கல்வி மற்றும் சுய சிந்தனை ஆகியவற்றிற்கு சாதகமாக இருக்கலாம். அடுத்த கட்ட முன்னேற்றம் நோக்கி செல்லலாம். வேலை தொழில் சம்பந்தமான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மன அமைதி பெற்று, வாழ்க்கையை பற்றிய புரிதல் ஏற்படும். முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தை விட அதிகம் கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சஞ்சாரம் சமூக வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவரும். உங்கள் உறவுகள் மேம்படும். நீங்கள் சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடலாம். மேலும், உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த சரியான வழியைப் பெறுவீர்கள், இது உங்கள் சமூக வட்டத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீனத்திற்கு செவ்வாய் பெயர்ச்சி தனிப்பட்ட மற்றும் தொழில் உறவுகளை பலப்படுத்தும். வேலை, தொழில் துறையினருக்கு முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்பு கிட்டும். எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மனைவியுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படும் காலமாக இருக்கலாம். புதிய உறவுகளில் நல்லிணக்கம் அதிகரிக்கும், புதிய திட்டங்கள் வெற்றி பெறும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி: பண மழையில் நனையப்போகும் இந்த 4 ராசிகள்!
மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி 2025... இந்த 5 ராசிகளுக்கு அற்புதமான விடியல் காத்திருக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ