ஷடாஷ்டக யோகம்... செவ்வாய் - ராகுவின் நிலையால் 4 ராசிகளுக்கு சிக்கல்கள் காத்திருக்கு

செவ்வாய் மற்றும் ராகுவின் நிலையால் ஏற்படும் சடாஷ்டக யோகம், சில ராசிகளுக்கு பண விரயத்தையும், மன சஞ்சலங்களையும் கொடுக்கும் என்று, ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 12, 2025, 01:08 PM IST
  • கடக ராசியில் செவ்வாயும், கும்ப ராசியில் ராகுவும் இருக்கும்போது உருவாகும் ஷடாஷ்டக யோகம்.
  • சர்ப்ப கிரகம் அல்லது பாவ கிரகம் என்று அழைக்கப்படும் ராகு கும்ப ராசிக்கு செல்வார்.
  • ஷடாஷ்டக யோகத்தால் பாதிக்கப்படும் சில ராசிகள்.
ஷடாஷ்டக யோகம்... செவ்வாய் - ராகுவின் நிலையால் 4 ராசிகளுக்கு சிக்கல்கள் காத்திருக்கு

செவ்வாய் மற்றும் ராகு பெயர்ச்சி: தற்போது கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய், தனது நீச்ச ராசியான கடக ராசியில் சஞ்சரிக்கிறார். ஜூன் ஆறு வரை கடக ராசியில் அவர் நீடித்திருப்பார். இந்நிலையில் வரும் மே மாதம் 18ம் தேதி சர்ப்ப கிரகம் அல்லது பாவ கிரகம் என்று அழைக்கப்படும் ராகு கும்ப ராசிக்கு செல்வார். செவ்வாய் மற்றும் ராகுவின் நிலையால் ஏற்படும் சடாஷ்டக யோகம், சில ராசிகளுக்கு பண விரயத்தையும், மன சஞ்சலங்களையும் கொடுக்கும் என்று, ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர்.

ஷடாஷ்டக யோக பலன்கள் (Shadashtaka Yogam Effects)

ஜோதிட சாஸ்திரத்தில், சடாஷ்டக யோகம் துன்பங்களை கொடுக்கும் யோகமாக கருதப்படுகிறது. இரு கிரகங்கள் ஆறாவது மற்றும் எட்டாவது வீட்டில் இருக்கும்போது சடஷ்டக யோகம் உருவாகிறது. இந்நிலையில், கடக ராசியில் செவ்வாயும், கும்ப ராசியில் ராகுவும் இருக்கும் போது உருவாகும் சடாஷ்டக யோகம் சில ராசிகளுக்கு பணவரயத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் ராகு பெயர்ச்சி மற்றும் செவ்வாய் பெயர்ச்சியினால் ஏற்படும் ஷடாஷ்டக யோகத்தால் பாதிக்கப்படும் ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்கான பலன்கள் (Aries Zodiac Sign)

பேச்சிலும் நடத்தையிலும் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது மிக கவனமாக செல்வதால், பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். மின் சாதனங்களை பயன்படுத்தும் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்கள் மன உளைச்சலை கொடுப்பதாகவும், பண விரயத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.

கடக ராசிக்கான பலன்கள் (Cancer Zodiac Sign)

கோபத்தை தவிர்ப்பதால், பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்பட்டு முடிவை எடுப்பதை தவிர்த்து, மனம் அமைதியான பின், சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனம் ஓட்டும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

துலாம் ராசிக்கான பலன்கள் (Libra Zodiac Sign)

வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் நிலவும். சொத்து வாகனம் தொடர்பான தகராறுகளை எதிர்கொள்ள நேரிடலாம். முக்கிய முடிவுகள் எதையும் எடுப்பதை, ஒரு மாத காலத்திற்கு ஒத்தி போடவும். பயணங்களால் பணவிரயம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. விபத்தில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படவும். உடல் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

கும்ப ராசிக்கான பலன்கள் (Aquaris Zodiac Sign)

உடல்நல பிரச்சனைகள் வாட்ட நேரிடும். முதலிலேயே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. நோய் தீவிரமடைந்த பின் செல்வதால், செலவுகள் அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும். எனினும் பொறுமையை கடைப்பிடிப்பதால் பலவிதமான சிக்கல்களை தவிர்க்கலாம். உறவுகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால், பேச்சிலும் நடத்தையிலும் கவனம் தேவை.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சனி தோஷம் விலக நவகிரகம் சுற்ற வேண்டிய 4 ராசிகள்..இதனால் நிம்மதியான வாழ்வு பெறலாம்!

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: அதிர்ஷ்டம், மகா பொற்காலம், ராஜயோகம் இந்த ராசிகளுக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News