Saturn Retrograde 2025: ஜோதிடத்தில், சனி மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகும். அதே நேரத்தில் சனி நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அள்ளித் தரும் கிரகமாகும். அந்த வகையில் சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருவார். அதனால் தான் சனி பகவானை நீதி தேவர் என்று கூறப்படுகிறது. எனவே, சனியின் நிலையில் ஏற்படும் சிறிய மாற்றம் அனைத்து ராசிக்காரர்களிலும் தெரிய வரும்.
சனி பகவான் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மீன ராசிக்குள் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை சனி இருப்பார். இந்த காலகட்டத்தில், சனி வக்ர நிலையில் செல்வார், இதன் தாக்கம் 12 ராசிகளிலும் தெரிய வரும். அந்த வகையில் வருகிற ஜூலை 13 ஆம் தேதி காலை 9:36 மணிக்கு, சனி மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலனைத் தரும். அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எனவே எந்த ராசிக்காரர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.
கன்னி ராசி (Virgo): சனி வக்ர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை உண்டாகும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபமும் பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும். தொழிலில் வெற்றி பெறலாம். கடின உழைப்புக்கு முழுமையான பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிலருக்கு திருமணம் நடக்கலாம், அல்லது திருமணம் நிச்சயிக்க படலாம். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
மகர ராசி (Capricorn): மகர ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசியின் மூன்றாவது வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிப்பார். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக செயல்படும். புதிய இடத்தில் வேலை வாய்ப்புகளை பெறலாம். தைரியம் அதிகரிக்கும். பல துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
மீன ராசி (Pisces): மீன ராசிக்கு சனியின் வக்ர பெயர்ச்சியால் சுப பலன் உண்டாகும். ஏனெனில் இந்த ராசியின் லக்ன வீட்டில் சனி வக்ர நிலையில் பயணிக்கப் போகிறார். இதனால் மீன ராசிக்காரர்கள் ஆரோக்கியத்திலும் ஆற்றலிலும் முன்னேற்றத்தை காண்பார்கள். சுய சிந்தனை மற்றும் சுய வளர்ச்சி அதிகரிக்கும். சமூக வாழ்வில் செல்வாக்கும் அதிகரிக்கும். வெளிநாடு செல்லலாம். சொகுசு வாழ்க்கை கிடைக்கும். வியாபாரத்தில் நன்மை உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்யப்படும் வேலையில் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இன்னும் 30 நாட்களில் குரு பெயர்ச்சி: ராஜ பொற்காலம், அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









