கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கும் காமதா ஏகாதசி விரதம்... சில எளிய பரிகாரங்கள்

விரதங்களில் சிறந்ததாகப் போற்றப்படும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு கோடி பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் காமதா ஏகாதசி நன்னாளில், வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள் அனைத்தையும் நீக்கும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 2, 2025, 02:57 PM IST
  • வளமான வாழ்க்கைக்கான அனைத்தையும் பெறவும் உதவும் சில பரிகாரங்கள்.
  • வீட்டில் செல்வ செழிப்பும் நிறைந்திருக்கும். பணத்திற்கும் குறைவிருக்காது.
  • வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள் அனைத்தையும் நீக்கும் பரிகாரங்கள்.
கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கும் காமதா ஏகாதசி விரதம்... சில எளிய பரிகாரங்கள்

காமதா ஏகாதசி: இந்து மதத்தில், ஒரு வருடத்தில் 24 ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. ஏகாதசி விரதம் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை அனுசரிக்கப்படுகிறது. ஏகாதசி தினத்தன்று, உலகத்தை காக்கும் விஷ்ணு பகவானுக்கும், அன்னை லட்சுமிக்கும் உகந்த நாளாக நம்பப்படுகிறது. ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து, இறைவனை வணங்க விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. 

Add Zee News as a Preferred Source

சித்திரை மாத, வளர்பிறை அதாவது சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசி தேதி காமதா ஏகாதசி என்று கொண்டாடப்படுகிறது. இந்த  விசுவாவசு ஆண்டு சித்திர மாத ஏகாதசி, மே 7 ஆம் தேதி காலை 10:19 மணிக்குத் தொடங்கி மே 8 ஆம் தேதி மதியம் 12:29 மணிக்கு முடிவடையும். ஏகாதசி விரதம் மே 8 அன்று அனுசரிக்கப்படும்.

ஏகாதசி நாளில் கஷ்டங்கள் நீங்க உதவும் சில பரிகாரங்கள்

ஏகாதசி நாளில் வாழ்க்கையின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கவும், வளமான வாழ்க்கைக்கான அனைத்தையும் பெறவும் உதவும் சில பரிகாரங்கள் பற்றி விரிவாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

துளசி  பரிகாரங்கள்

ஏகாதசி நாளில், மாலையில் துளசி செடியின் கீழ் பசு நெய்யால் ஒரு தீபம் ஏற்றி, பகவான் மகா விஷ்ணுவை தியானித்துக் கொண்டே துளசி செடியை ஏழு சுற்றுகள் வலம் வரவும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் குறைவிருக்காது. வீட்டில் செல்வ செழிப்பும் நிறைந்திருக்கும். பணத்திற்கும் குறைவிருக்காது.

வாழை மரம் வழிபாடு

வீட்டில் கணவன் மனைவி இடையே தொடர்ந்து சண்டை சச்சரவு இருந்தால், ஏகாதசி நாளில், வாழை மரத்தை தூபம், தீபம் ஏற்றி வணங்கி, விஷ்ணுவுக்கு குங்குமப்பூ கலந்த பால் படைக்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு, அதைப் பிரசாதமாக குடிக்கவும். இப்படிச் செய்வதன் மூலம் கணவன் மனைவி இடையேயான உறவு இனிமையாக மாறும்.

கோமதி சக்கர பரிகாரம்

நீங்கள் வேலையில், தொழிலில் வியாபாரத்தில் சிக்கல்களை எதிர்கொண்டால், காமதா ஏகாதசியன்று 11 கோமதி சக்கரங்களையும் 3 சிறிய தேங்காய்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை கோவிலில் வைத்து, தூப தீபம் ஏற்றி வணங்கவும். பூஜைக்குப் பிறகு, கோமதி சக்கரம் மற்றும் ஏகாசி தேங்காயை ஒரு மஞ்சள் துணியில் கட்டி, அலுவலகம் அல்லது கடையின் பிரதான நுழைவாயிலில் தொங்கவிடவும். இந்த பரிகாரம் மூலம், பணியிடத்தில் தொழிலில் சந்தித்து வரும் சிக்கல் அனைத்தும் நீங்கும்

தடைபட்ட  பணம் கிடைக்க உதவும் பரிகாரம்

கடன் கொடுத்தவரிடம் பணம் சிக்கிக்கொண்டால், மோகினி ஏகாதசி நாளில் ஒரு கோமதி சக்கரத்தை எடுத்துக்கொண்டு, மாலையில் இருட்டியதும், வீட்டிற்கு வெளியே உள்ள ஒரு வெறிச்சோடிய இடத்திற்கு அல்லது காலியான இடத்திற்குச் சென்று ஒரு குழி தோண்டி, விஷ்ணுவின் நாமத்தை உச்சரித்து, அந்தக் குழியில் கோமதி சக்கரத்தை புதைக்கவும். அந்த நபர் உங்கள் பணத்தைத் திருப்பித் தர கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இந்த பரிகாரம் உங்களுக்கு நன்மை பயக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | வளங்கள் தரும் வைகாசி... சூரியன் குரு அருளால் ஜாக்பாட் பலன்களை பெரும் சில ராசிகள்

மேலும் படிக்க | மேஷத்தில் புத-ஆதித்ய யோகம்... குறையாத செல்வம், வளமான வாழ்வைப் பெறும் 5 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News