திருஷ்டி என்பது சில சமயங்களில் ஒருவரின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கலாம். இதற்கான எளிய பரிகாரங்களை தெரிந்து கொண்டால், நிம்மதியாக இருக்கலாம்.

கண் திருஷ்டி அல்லது திருஷ்டி பாதிப்பு என்பது தீய கண்கொண்டு சிலர் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை குறிக்கிறது. அதாவது பொறாமை வெறுப்பு போன்ற தீய எண்ணங்களுடன் பிறர் நம்மிடம் பழகும் போது, அதனால் பாதிப்பு ஏற்படுவதை திருஷ்டி என்று கூறுவார்கள். திருஷ்டி என்பது சில சமயங்களில் ஒருவரின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கலாம். இதற்கான எளிய பரிகாரங்களை தெரிந்து கொண்டால், நிம்மதியாக இருக்கலாம்.
கண் திருஷ்டிக்கான பரிகாரங்கள்
திருஷ்டிக்கான பரிகாரங்கள் என்பது சந்தர்ப்பம் சூழ்நிலை, நேரம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். அதாவது ஒரு திருமண நிகழ்ச்சியில் ஏற்படும் திருஷ்டி என்பது, பிறர் நமக்கு இதுபோன்று திருமணம் நடக்கவில்லையே, அல்லது நமக்கு இதுபோன்ற கணவன் அல்லது மனைவி கிடைக்கவில்லையே என்று, நன்றாக நடக்கும் திருமணத்தை பார்த்து ஏக்க உணர்வு ஏற்படுவதால் ஏற்படும் திருஷ்டியாகும். இது பொறாமை உணர்வு காரணமாகவும் ஏற்படலாம்.
இது போன்ற சமயங்களில், மணமக்கள் வீட்டிற்கு வரும்போது ஆரத்தி எடுத்து திலகம் இடுவது வழக்கமாக இருக்கிறது. ஏனெனில் ஆரத்தி எடுக்கும் போது பயன்படுத்தப்படும் மஞ்சள் குங்குமம் கலந்த நீர், ஆரத்திக்கு பயன்படுத்தப்படும் வெற்றிலை, கற்பூரம் ஆகியவை தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டவை.
சுப நிகழ்வுகளின் போது, திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றலை போக்க ஆரத்தி எடுக்கும் வழக்கம் உள்ளது. அதே போன்று, வீட்டில் சுப காரியம் நடக்கும் போது வாசலில் வாழை மரத்தை கட்டு பழக்கம் உள்ளது. வாழை திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொண்டு, எதிர்மறை ஆற்றலை செயலிழக்கச் செய்யும் என்பது தான் இதற்கு காரணம்.
ஒருவர் நல்ல நிலையில் இருப்பதை பார்த்து ஏற்படும் திருஷ்டியை தவிர்க்க, வீட்டில் சில பொருட்களை வைக்கலாம். பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் வைப்பது திருஷ்டியை கழிக்க உதவும். அதேபோன்று வீட்டில் மீன் தொட்டி வைப்பதும் திருஷ்டியை போக்கும்.
வீட்டின் வாசலில் கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். பிக்னங்களை நீக்கும் விநாயகர், நேர்மறை ஆற்றலை நிர்மூலமாக்கி வீட்டில் மகிழ்ச்சியும் இன்பமும் நிலைக்க உதவுவார்.
வீட்டில் காலையிலும் மாலையிலும், மந்திரங்களை ஒழிக்க வைப்பதும், நேர்மறை ஆற்றல் நிறைந்து எதிர்மறை ஆற்றல் முற்றிலுமாக நீங்க உதவும்.
வாரம் ஒரு முறை குளிக்கும் தண்ணீரில் கல் உப்பை கலந்து குளித்து வருவதால் திருஷ்டி கழிவதோடு, உடல் அசதி மற்றும் சோம்பல் ஆகியவை நீங்கும். கல் உப்பு கலந்து குளிக்கும் கிழமையை தேர்ந்தெடுக்கும் போது பிறந்த கிழமையை தேர்ந்தெடுக்கலாம். இல்லையென்றால் செவ்வாய்க்கிழமை குளிப்பதும் பலன் தரும்.
வளர்பிறையில் வரும் செவ்வாய் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கடற்கரைக்குச் சென்று, கடல் நீரை கொண்டு வந்து, அதை பயன்படுத்தியும் பரிகாரம் செய்யலாம். கடல் நீரில் மஞ்சள் பொடி கலந்து, வீட்டில் பரவலாக தெளிப்பது நல்லது. தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்கள் கடை மற்றும் அலுவலகங்களில் இதனை தெளிக்கலாம்.
வீட்டில் சாம்பிராணி புகை போடுவதும் திருஷ்டி கழிக்க உதவும். வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் இருவேளையும் சாம்பிராணி போடுவதால் வீட்டில் அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், வாஸ்து சாஸ்திரங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ