)
ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை சிறப்பாக இருந்தால், ஆடம்பர வாழ்க்கை, மனம் நிறைந்த திருமண வாழ்க்கை, அழகிய தோற்றம், எண்ணற்ற செல்வம் ஆகியவை கிடைக்க பெற்று, வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் அடைந்து, மகிழ்ச்சியாக இருக்கலாம். சுக்கிரனின் அருள் இருந்தால், பருவ வயதில் திருமணம் கைகூடி வருவதோடு, நிறைவான வாழ்க்கையும் நீங்காத செல்வமும் கிடைக்கும். அதனால் தான், பணம் புகழ், அழகிய தோற்றம், ஆடம்பர வாழ்க்கை என அனைத்தும் கிடைக்கப் பெற்றவர்களை பார்த்து, அவர்களுக்கு சுக்கிர திசை அடித்துள்ளது என்று கூறும் வழக்கம் உள்ளது. இதன் மூலம் சுக்கிரனின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.
அதே சமயத்தில், ஜாதகத்தில் சுக்கிரன் நிலை பலவீனமாக இருந்தால், வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரலாம். வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திப்பதோடு, வறுமை நிலைக்குக் கூட தள்ளப்படலாம். மகிழ்ச்சியற்ற வாழ்க்கை, குழந்தை பேரு இல்லாத நிலை ஏற்படக்கூடும். அதோடு கண் தொடர்பான நோய்கள், சிறுநீரக நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இந்நிலையில், ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை வலுப்பெறவும், சுக்கிரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கவும் செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
சகல சௌபாக்கியங்களையும் அள்ளிக் கொடுக்கும் சில எளிய சுக்கிரன் பரிகாரங்கள்
1. சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமைகளில், அன்னை மகாலட்சுமியை வழிபடுவதும், விரதம் இருந்து பாலில் தயாரித்த இனிப்புகளை நைவேத்தியம் செய்து விநியோகிப்பதும் பலன் தரும்.
2. சுக்கிரனின் அருளை பரிபூரணமாக பெற, தினமும் ஸ்ரீ சுத்தம் பாராயணம் செய்வதும், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும் பலன் தரும். இதனால் வாழ்க்கையில் சந்திக்கும் நிதி நெருக்கடிகள் அனைத்தும் நீங்கும் பண வரவு சிறப்பாக இருக்கும். குபேர யோகம் கைகூடும்.
3. சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற பொருட்களை தானம் செய்வதும் பலன் தரும். சர்க்கரை அரிசி பால் ஆகியவை சுக்கிரனுக்கு மிகவும் உகந்த பொருட்கள். ஏழை எளியவர்களுக்கு, பால் மற்றும் சசர்க்கரை சேர்த்த இனிப்புகள் அல்லது பாயசம், அன்னதானம் ஆகியவற்றை வழங்குவது சுக்கிரனின் அருளை பெற உதவும்.
4. சுக்கிர வாரம் என்று அழைக்கும் வெள்ளிக்கிழமைகளில், வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வதும், லக்ஷ்மி சகஸ்ரநாம பாராயணம் செய்வதும், பலன் தரும்.
5. சுக்கிர பகவானின் ஸ்தலமான, தஞ்சாவூர் மாவட்டத்தின் கஞ்சனூரில் உள்ள அருள்மிகு அக்கினீஸ்வரர் திருக்கோவில் சென்று, வழிபடுவது சுக்கிரனின் அருளை பெற உதவும். சுக்கிர பகவானுக்காக இந்த பிரத்தியேக கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், தங்கள் வீட்டின் அருகே இருக்கும் கோவிலில், நவக்கிரக சந்நிதியில் உள்ள சுக்கிர பகவானை வழிபடுவதும் பலன் தரும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ