Suriyan - Sevvai Serkai Palangal: மே மாதம் 11 ஆம் தேதி அன்று சூரியன் மற்றும் செவ்வாய் மேஷ ராசியில் நேர்கோட்டில் இணைகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகத்தை பெற இருக்கின்றனர். அவர்களின் நிதி பிரச்சனை முற்றிலுமாக முடிவுக்கு வரும். அவர்கள் யார் யார்? என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஜோதிடத்தின் படி, நவகரகங்களின் ஒவ்வொரு இயக்கமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம், அதன் அசைவுகள் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.
இந்த நிலையில், வரும் மே மாதம் ஒரு முக்கிய கிரக சேர்க்கை நடைபெற இருக்கிறது. அதாவது மே 11 ஆம் தேதி நவகரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும் கிரகங்களின் தளபதியாக செவ்வாய்யும் நேர்கோட்டில் இணைகிறது. இந்த முக்கிய சேர்க்கை மேஷ ராசியில் நடக்கிறது. சூரியன் தன்னம்பிக்கை, அதிகாரம் போன்றவற்றையுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் செவ்வாய் துணிச்சலையும் செயல்திறனையும் குறிக்கிறத். இந்த சூழலில், இவ்விரு கிடகங்களும் சேருவது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் சிறப்பான நன்மைகளை பெற இருக்கின்றனர். அவர்கள் யார் யார்? எந்த மாதிரியான பலன்களை பெற இருக்கின்றனர் என்பதை இங்கு பார்க்கலாம்.
சூரியன் மற்றும் செவ்வாய்யின் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை நிகழ்த்த இருக்கிறது. இந்த காலகட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக அமைய உள்ளது. புதிதாக வாகனம், நிலை அல்லது வீடு போன்ற சொத்துக்களை வாங்கும் யோகம் உள்ளது. கடந்த காலத்தில் செய்ய முடியாத சில விஷயங்களை இந்த காலகட்டத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். உங்களுடன் முறன்பட்டு இருப்பவர்கள் அல்லது உங்கள் மீது தவறான எண்ணங்களை கொண்டுள்ளவர்கள் இந்த காலத்தில் உங்களை புரிந்து கொள்வார்கள். திருமணம் நடக்காதவர்களுக்கு நல்ல வரன் அமையும். பல சாதனைகளை செய்வீர்கள். மேலும், குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் சூரியன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் வாழ்க்கையில் பல ஆதாரங்களை பெற இருக்கின்றனர். நேர்மறையான பலன்களை பெற முடியும். இதுவரை இருந்த பொருளாதார சிக்கள் முடிவுக்கு வரும். வேலையிடத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. வகுக்கும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். இதனால் மன நிம்மதி மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். மொத்தத்தில் இந்த காலகட்டம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கப்போகிறது.
சூரியன் மற்றும் செவ்வாய் சேர்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளை வழங்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக நிறைவடையும். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு முதலீடு செய்ய இது சரியான நேரம். ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். நிதி பிரச்சனை முடிவுக்கு வந்து அதிக பணம் சம்பாதிக்க முடியும். வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் அதனால் நன்மைகள் கிட்டும். கூடுதல் வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். மேலும், ஆரோக்கியத்தில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் அது சரியாகி குணமடைய முடியும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!