)
Sun Transit In Virgo 2025: கிரகங்களின் ராஜாவான சூரியன், ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். அதன்படி அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதத்தில், சூரியன் சிம்ம ராசியை விட்டு வெளியேறி கன்னி ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். கன்னி ராசியில் சூரியனின் பெயர்ச்சியானது செப்டம்பர் 17 ஆம் தேதி மதியம் 01:54 மணிக்கு நடைபெறும், மேலும் அதுக்கு அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 16 வரை இந்த ராசியில் தான் சூரியன் பயணிப்பார். கன்னி ராசியின் அதிபதி புதன் கிரகம் ஆகும். அதன்படி கன்னி ராசியில் சூரியனின் பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றத்தால் நல்ல பலன்களைப் பெறுவார்கள், எனவே அந்த ராசிக்காரர்கள் எவை என்று பார்ப்போம்.
1. மிதுன ராசி (Gemini Zodiac Sign)- மிதுன ராசிக்காரர்கள் சூரியனின் பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளைப் பெறலாம். தொழில் ரீதியாக மிதுன ராசிக்காரர்கள் முன்னேற்றத்தை அடைவார்கள், மேலும் வெற்றி பெறுவார்கள். நிதி நிலை வலுவாக இருக்கும், மேலும் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். மன ரீதியாக உங்களுக்கு வலிமை கிடைக்கும். காதல் வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
2. துலாம் ராசி (Libra Zodiac Sign)- துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி நல்லதாக இருக்கும். இந்த நேரத்தில், உங்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். நல்ல மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் துணையுடன் நல்ல உரையாடலை பேணுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். சில நல்ல செய்திகளைப் பெற்று மனம் மகிழ்ச்சியடையும்.
3. விருச்சிக ராசி (Scorpio Zodiac Sign)- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் காணும் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் லாபம் ஈட்டலாம். நிதி ரீதியாக, இந்த நேரம் உங்களுக்கு நன்மை பயக்கும். பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும், சேமிப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், வாஸ்து சாஸ்திரங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ